உயிரிழந்தது வங்கப் புலி விஜயன்.. வண்டலூரில் அதிர்ச்சி! புலிகள் எண்ணிக்கையை அதிகரித்ததே விஜயன்தானாம்!
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் வங்கப் புலி 'விஜயன்' இன்று உயிரிழந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததில் விஜயனின் பங்கு அதிகம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள், மலைப்பாம்புகள் மற்றும் பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும், உயிரினங்களும் உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து உயிரினங்களை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் வங்கப் புலி கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. விஜயன் என்ற 21 வயது கொண்ட ஆண் வங்கப் புலி கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் உணவு உட்கொள்வதை குறைத்து கொண்டதன் காரணமாக படிப்படியாக அதனுடைய உடல்நிலை சரியில்லாமல் போனது.
விஜயன் புலியின் உடல்நிலை தொடர்ந்து தொய்வடைந்து வந்த நிலையில், அதற்கு ரத்த பரிசோதனை செய்ததில், அதன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், வங்கப் புலி விஜயனுக்கு வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தது. பூங்கா வன உயிரின மருத்துவ குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயன் இன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த வங்கப் புலி விஜயனுக்கு 21 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்ததில் விஜயனின் பங்கு அதிகம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications