நடிகர் நெப்போலியன் இப்படிப்பட்டவாரா? அதைவிடுங்க, "அந்த" பெயரை சொன்னதுமே சட்டுனு கலங்கிய நடிகை அபிராமி
சென்னை: சரத்குமார், நெப்போலியன் இருவருமே அரசியல் துறையில் தனித்தனியாக முத்திரை பதித்தவர்கள் என்றும், இருவருமே கொள்கைப்பிடிப்பில் உறுதிமிக்கவர்கள் என்றும் நடிகை அபிராமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை அபிராமி... மிடில் க்ளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், சமஸ்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.. இதில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்திருந்தது, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இவரது பூர்வீகம் கேரளா மாநிலமாக இருந்தாலும், விருமாண்டி படத்தில் மதுரை தமிழை, சரியான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்களுடன் பேசி பலரின் பாராட்டுக்களை பெற்றவர் அபிராமி.
விருமாண்டி : கமலின் தீவிர ரசிகையும்கூட.. அதனால்தான் திவ்யா கோபிகுமார் என்ற பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டதாக பலமுறை அவரே பேட்டிகளில் கூறியுள்ளார். விருமாண்டி படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிய அபிராமி, 11 வருட இடைவெளிக்கு பிறகு ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு, படங்களில் அபிராமியை பார்க்க முடியவில்லை.. இதனிடையே கமல் ஒருபேட்டியின்போது, விருமாண்டி படத்தில் அபிராமியின் நடிப்பை பற்றி பாராட்டி பேசியிருந்தார்.. "அபிராமி வேற்று மொழி தெரிந்தவர். அவர் தெக்கித்தி மொழி எப்படி பின்னி எடுக்கிறார் பாருங்க. சின்ன சின்ன விஷயங்களை கூட அவ்வளவு அழகாக பேசியிருப்பார். நான் எல்லா ஹீரோயின்களுக்கும் டப்பிங் அவங்களைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் அவரை வைத்துதான் டப்பிங் செய்தேன்.

நெப்போலியன்: அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் போல் பேச வேண்டும். அதனால் தான் அவரை வைத்து பேச வைத்தேன். எல்லாற்றையும் புரிந்து பேசுவார். இவர் சிறந்த நடிகை. இன்டஸ்ரி விட்டு போயிருக்க கூடாது. இருந்தாலும் இப்போ நல்லதான் இருக்காங்க. ஒரு 10 பாட்டுக்கு காஷ்மீர்ல டான்ஸ் ஆடுறதைவிட இந்த முள்ளுகாட்டில் நடந்து வரும் ஒரு ரொமான்ஸ்க்கு காட்சிக்கு ஈடாகாது" என்று கூறியிருந்தார்.. இதை பேட்டியை பார்த்ததுமே அபிராமி கண்கலங்கிவிட்டார்.. மகிழ்ச்சியுடன் நன்றியும் கூறியிருந்தார்.. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் கோடம்பாக்கம் திரும்பியுள்ளார் அபிராமி..
"ஒரு கோடை மர்டர் மிஸ்டரி" என்ற படத்தில் அபிராமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்... அவர் நடிக்கும் முதல் இணையத் தொடர் இதுவென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. இந்நிலையில், ஒரு சேனலுக்கு அபிராமி பேட்டி தந்திருக்கிறார்.. அதில் நடிகர் நெப்போலியன், சரத்குமார் பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார். அதேசமயம், மறைந்த விவேக் பற்றி சொல்லும்போது, அபிராமியின் குரல் உடைந்து தழுதழுத்தது. அபிராமி அப்போது சொன்னதாவது:

சரத்குமார்: நெப்போலியன் சார், சரத்குமார் சார், இவர்கள் 2 பேருமே அரசியல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் பெற்றவர்கள்.. மற்றவர்கள் நலனில் அதிக அக்கறை கொள்பவர் சரத்குமார் சார்.. கொள்கை பிடிப்பு மிக்கவர்.. நெப்போலியன் சாரை பொறுத்தவரை, மிக உயரிய குணம் கொண்டவர்.. நல்ல மனசு உடையவர்.. சொந்த வாழ்க்கையில் பல போராட்டங்கள், கஷ்டங்கள் அவருக்கு இருந்தாலும், அதையெல்லாம் முறியடித்து கொண்டு மேலே வந்தவர்.. அந்த பாசிடிவ் விஷயங்களை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்..
விவேக் அண்ணா: மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு அண்ணா, விவேக் அண்ணா இருவருடனும் நடித்தேன்.. இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிப்பவர்கள்.. வடிவேலு அண்ணா ஷூட்டிங்கில் ஆடிக்கொண்டே இருப்பார், பாடிக்கொண்டே இருப்பார்.. தன்னை சுற்றியிருப்பவர்களை எந்நேரமும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்.. ஆனால், விவேக் அண்ணாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.
அவருடைய அறிவு, சிந்தனை, அவருடைய இசைஞானம், புத்தகம், லைப்ரரி வாசம், இதெல்லாம் பார்த்து பிரமித்து போயிருக்கேன்.. அவர் எங்கியோ உயரத்தில் இருந்திருக்க வேண்டிய நபர்.. இன்னும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கக்கூடியவர்.. மிகப்பெரிய அறிவாளி விவேக் அண்ணா.. நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் முக்கியமானவர்.. " என்று நெகிழ்ந்து கூறினார் அபிராமி..!!


Click it and Unblock the Notifications
