ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: ஜில் ஜில்லென்ற ஏசி - நம்முடைய உடலுக்கு நல்லதா? இரவெல்லாம் ஏசி ஓடுவது, நமக்கு கெடுதலா? இதனால் கிடைக்கும் உடல்நலக் கோளாறுகள் என்னென்ன தெரியுமா?
கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது.. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது... ACயை இரவெல்லாம் ஓடினாலும், கரண்ட் பில் குறைவாக ஒரு சில டிப்ஸ்களை கையாள வேண்டும் என்கிறார்கள்..

வெப்பநிலை: முக்கியமாக, குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை ஓடவிடாமல், 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதே நல்லது. மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டுமாம்.. இதனால் கரண்ட் பில் மிச்சமாகும்.
அதேபோல, ACயை சர்வீஸ் செய்தே பயன்படுத்த வேண்டும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும். கரண்ட் பில் ஒருபக்கம் இருந்தாலும், நம்முடைய ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம், ஏசியை ஒழுங்காக பராமரிக்காவிட்டால், மாசு காற்று, அதே ரூமில் பரவி சுவாசக்கோளாறை ஏற்படுத்திவிடும். ஏசியின் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதிலிருக்கும், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்கிருமிகள் சேர்ந்து, உடல்நலம் பாதிப்பை தந்துவிடும்.
ஜில் காற்று: அதேபோல, ஏசியிலிருந்து வெளிவரும் ஜில் காற்றானது, நம்முடைய சுவாசப்பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்..
இந்த ஜில் காற்று, நம்முடைய உடலிலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும்.. எதிர்ப்பு சக்தி குறைந்தால், நம் உடலில் எளிதில் தொற்றுகள் நுழைந்துவிடும். சுவாசப் பாதையில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கம் வந்துவிடும்.. இதனாலும் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்.
நா வறட்சி: எனவே, எப்போதுமே ஏசி ரூமிலேயே தூங்குவது சுவாச தொற்றுகள் அதிகரிக்க காரமாகிவிடும். குறிப்பாக, ஆஸ்துமா அல்லது அலர்ஜி தொந்தரவு உடையவர்கள் மேலும் அவதிக்கு ஆளாகிவிடுவார்கள். காரணம், ஏசியிலிருந்து வெளியே வரும் ஜில் காற்று, சருமத்திற்கு நல்லதில்லை.. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, சரும வறட்சி இன்னும் அதிகமாகிவிடும்..
எப்போதுமே குளிர்காற்று முகத்தில் வீசி கொண்டிருந்தால், கண்களுக்கு ஆரோக்கியம் கிடையாது. கண்கள் உலர்ந்துவிடும்.. எரிச்சலை தருவதுடன், கண் அரிப்பு, சிவந்து போதல், என பல சிக்கல்களை கொண்டுவந்துவிடும்.
தசைகள்: குளிர்ச்சி காற்று உடலில் படுவதால், மூட்டு வலி பாதிப்பும் வரலாம்.. ஏனென்றால், உடல் அதிக நேரம் குளிர்ந்த வெப்பநிலையில் இருப்பதால், தசைகள் சுருங்குவதற்கும் இறுக்கமடைவதற்கும் காரணமாகிறது.. இது தசை விறைப்பு மற்றும் மூட்டு வலியை தந்துவிடும். எனவே, அதனால், உடலை போர்வையால் மூடிக்கொண்டு படுத்தால், மூட்டு பாதிப்பு குறையும்..
அதிக குளிரில் தூங்காமல், வெப்பநிலை சுமார் 72-75 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்படி வைத்து கொண்டால் போதும். வெப்ப நிலை 22 சென்டிகிரேட்டுக்கு கீழே போகக்கூடாது.. ஏசியை இரவெல்லாம் ஓடவிட்டு தூங்கினால், நீரிழப்பு ஏற்பட்டு தூக்கத்திற்கும் தொந்தரவு வந்துவிடும்.
ஒருவேளை, ஏசியிலிலேயே இருக்க வேண்டிய சூழல் வந்தால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. உதடுகள் வறட்சி அடையாமல் இருப்பதற்கான கிரீம்கள், மாய்ஸ்ச்சரைசர்களை பயன்படுத்த வேண்டும்.
உதடுகள்: நம்முடைய உடலுக்கு வைட்டமின் D மிகவும் தேவையானதாக உள்ளது.. இது சூரியக்கதிர்கள் மூலம் எளிதில் உடலுக்கு கிடைக்கிறது.. எனவே, எவ்வளவுதான் ஏசியை பயன்படுத்தினாலும், 20 நிமிட வெயிலில் நிற்பது அவசியம்.












Click it and Unblock the Notifications