ஸ்டாலின் முழு முயற்சி.. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு விரைந்த பாரத் பயோடெக் அதிகாரிகள்.. ஆய்வு
சென்னை: செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். தடுப்பூசி நிறுவனத்தில் ஹிந்துஸ்தான் பாரத் பயோடெக் உயர் அலுவலர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
மத்திய அரசு போதிய கொரோனா வேக்சின் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதாலும், வெளிநாட்டு டெண்டர் பெரிய அளவில் கைகொடுக்க வாய்ப்பு இல்லை என்பதால் தமிழகத்திலேயே வேக்சின் தயாரிக்கும் திட்டத்தை முடுக்கி விட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, ஆஸ்டர் செனகா அதிகாரிகளை இரண்டு நாட்கள் முன்பு சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று பாரத் பயோடெக் அதிகாரிகளை சந்தித்தார். இதையடுத்துதான், அலுவலர்களின் அதிரடி ஆய்வு நடந்தது.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்
செங்கல்பட்டு அடுத்த திருமணி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் மையத்திற்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு "தேசிய முக்கியத்துவ திட்டம்" என்று ஒப்புதல் அளித்தது. நமது நாட்டின் தடுப்பூசி தேவையில் 75% எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளப்படும் மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என ஒப்பந்தம் உள்ளது. இதனைத் தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

தளவாடங்கள்
இதில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

நிதி ஒதுக்கவில்லை
இப்பணிகளில் பயோ டெக்னாலாஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதமானதால், 2017ம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரிவாக்க அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

போன வருடம் முதல் கோரிக்கை
இங்கு, உலகத்தரம் வாய்ந்த தளவாடங்களும் வசதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு கொரானா உச்சத்திற்கு சென்ற போது உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்திற்கு இருப்பதால் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டிகே.ரங்கராஜன் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்து பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து இந்த நிறுவனத்தை உடனடியாக துவக்க வேண்டும். கொரானா தடுப்பு மருந்துகளைதயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

வாய் திறக்காத மத்திய அமைச்சர்
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றார். இருந்த போதிலும் இன்றுவரை மத்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தில் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கான நிதியும் ஒதுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.

டெல்லி விரைந்தனர்
இந்நிலையில் கடந்த மாதம் பொறுப்பேற்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்எல்எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்த நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் மத்திய அரசாங்கத்திற்கும் பல கடிதங்களை எழுதி உள்ளார். மேலும் திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லிக்கு சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தடுப்பூசி மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார் ஸ்டாலின்.

பாரத் பயோடெக் அலுவலர்கள்
இந்நிலையில் மத்திய அரசாங்கம் எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை நேரில் அழைத்து இந்நிறுவனத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

8 மணி நேரம் ஆய்வு
இதனை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி முதல் ஹிந்துஸ்தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக துணை இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குனர் சாய் பிரசாந்த் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு செங்கல்பட்டு எச்எல்எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 8மணி நேரமாக ஆய்வு நடைபெற்றது.

மத்திய அரசுக்கு அறிக்கை
இதுகுறித்து ஆய்வு செய்த அலுவலர்கள் கூறுகையில், மாநில அரசின் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பது குறித்து ஆய்வு நடத்தினோம். இதுகுறித்து விரிவான அறிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்க உள்ளோம். அதன் பின்பு தடுப்பூசிகள் தயாரிப்புகள் குறித்து அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்தனர்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications