தம்பி பொறந்துட்டான்..மனோஜ் பிறந்த அடுத்த நாளே பாரதிராஜாவுக்கு அதிர்ஷ்டம்..பிரபலம் சொன்ன ப்ளாஷ்பேக்
சென்னை: தமிழ் திரை உலகில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. அது நாள் வரை பிரம்மாண்ட செட்டுகளுக்குள் முடங்கி கிடந்த சினிமாவை வயல்வெளிகளுக்குள் கொண்டு சென்றவர் பாரதிராஜா. இன்று தனது ஒரே மகனான மனோஜை இழந்து தவிக்கிறார் பாரதிராஜா. இந்த நிலையில் அவரது முதல் படமான 16 வயதினிலே வாய்ப்பு மனோஜ் பிறந்த அடுத்த நாளே கிடைத்ததால் தனது மகனை அதிர்ஷ்டம் மிக்கவராக எண்ணி வந்ததாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ் சினிமாவை பாரதிராஜாவுக்கு முன் பாரதிராஜாவுக்கு பின் என பிரித்து விடலாம். மாளிகையானாலும் சரி குடிசை ஆனாலும் சரி சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்த முறையை உடைத்து தேனியிலும், திண்டுக்கல்லிலும், மதுரையிலும், கோபிசெட்டிபாளையத்திலும் ஷூட்டிங் நடத்தி மக்கள் கலையாக சினிமாவை மாற்றியவர் பாரதிராஜா என்றால் அது மிகையாகாது.

தனது ஒரே மகனான மனோஜ் எப்படியாவது மிகப் பெரிய ஹீரோவாக்கி விட வேண்டும் என்பது பாரதிராஜாவின் கனவு. காரணம் அவர் அறிமுகப்படுத்திய நாயகர்களும் நாயகிகளும் தமிழ் சினிமாவை இன்று வரை கட்டி ஆள்கிறார்கள்.
அந்த வகையில் தாஜ்மஹால் படத்தின் மூலம் தனது மகனான மனோஜை நாயகனாக அறிமுகப்படுத்தினார். முதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதற்கு பிறகு சமுத்திரம், அல்லி அர்ஜுனா, கடைசியாக விருமன் உள்ளிட்ட பல படங்களில் மனோஜ் நடித்திருந்தார். ஆனாலும் தந்தை நினைத்தது போல ஒரு மிகப்பெரிய ஹீரோவாக அவரால் வலம் வர முடியவில்லை. ஒருவேளை பாரதிராஜாவின் மகன் என்று அடையாளமே அவருக்கு தடையாக கூட இருந்திருக்கலாம்.
இந்த நிலையில் கடைசியாக தனது தந்தையை வைத்து மார்கழி திங்கள் படத்தை இயக்கிய அவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று மரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் மனோஜ்க்கு இரங்கல் தெரிவித்ததோடு அவரது தந்தையான பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். என்னதான் ஆறுதல் கூறினாலும் புத்திர சோகம் அவ்வளவு சீக்கிரம் விட்டு விடாது .
இது ஒரு புறம் இருக்க தனது குடும்பத்தினரில் மனோஜ் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார் பாரதிராஜா. மகன் என்பதை தாண்டி அவரது அதிர்ஷ்டத்திற்கு காரணமே தனது மகன் தான் என நினைப்பாராம். அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. பாரதிராஜாவுக்கு ஜெயராஜ் என்ற ஒரு தம்பி இருக்கிறார். இயக்குனர் வாய்ப்பு தேடி பாரதிராஜா கோடம்பாக்கத்தை சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில் ஜெயராஜ் வேலையில் சேர்ந்து விட்டார். 1976 ஆவது வருடம் ஜெயராஜ் பாரதிராஜாவின் வீட்டுக்கு வருகிறார்.
அப்போது கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இருக்கிறது. வீட்டுக்குள் இருந்த பாரதிராஜா," தம்பி பொறந்துட்டான் காலையிலிருந்து டென்ஷனாவே இருந்துச்சு. இப்பதான் குழந்தை பிறந்ததா போன் பண்ணாங்க" என சொல்லி இருக்கிறார். அப்போது கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸை கொடுத்து சாப்பிட சொல்லி இருக்கிறார் ஜெயராஜ். மனோஜ் பிறந்த அடுத்த நாள் 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளரான ராஜ் கண்ணு வீட்டுக்கு வருகிறார்.
பாரதிராஜாவின் வீட்டில் அப்போது சேர் சோபா எல்லாம் இல்லை. வீட்டில் இருந்த பாயை விரித்து ராஜ் கண்ணுவை அமர வைத்திருக்கிறார். அப்போது ராஜ்கண்ணு தன் கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸை கொடுத்து," பாரதிராஜா பணத்தை ஏற்பாடு செய்து விட்டேன். விரைவில் 16 வயதினிலே படத்தை ஆரம்பிக்கலாம்" என கூறியிருக்கிறார். மகன் பிறந்த அடுத்த நாளே தனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போன பாரதிராஜா முதலில் ஊருக்கு போய் மகனை பார்த்து விட்டு வந்தவுடன் படத்தை ஆரம்பிக்கலாம் என கூறி இருக்கிறார்.
தொடர்ந்து ஜெயராஜ், பாரதிராஜா, ராஜ் கண்ணு ஆகியோர் மெரினா பீச்சுக்கு சென்று ஒரு சம்பிரதாயத்திற்காக கதையை கேட்டு படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். பாரதிராஜா ஊருக்கு செல்ல பணம் இல்லை. தொடர்ந்து பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அவரது நண்பரான ஆறுமுகத்திடம் போய் கேட்க அவரோ தனது மனைவியின் வளையல்களை வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை ஜெயராஜ் இடம் கொடுத்து பாரதிராஜாவை ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மனோஜூம் 16 வயதினிலே படமும் ஒரே ஆண்டில் பிறந்தது. மனோஜின் ஒரு வயதில் அந்த படம் வெளிவந்து விட்டது. அதற்கு பிறகு பாரதிராஜா தொட்டதெல்லாம் உச்சம்தான். அதனாலேயே தனது மகன் மீது பாரதிராஜாவுக்கு அளவு கடந்த பிரியம் எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்ரா லட்சுமணன்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications