புற்றுநோயால் மரணமடைந்த.. பவதாரணி உடல் இலங்கையில் இருந்து நாளை தமிழகம் கொண்டுவரப்படுகிறது
சென்னை: இலங்கையில் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்த இளையராஜா மகள் பவதாரணியின் உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி (47). இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்த, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

பவதாரணி மயில் போல பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பிலும் பவதாரணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு 3 திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்து வந்தார். 5 மாதங்களாக உடல் நல பிரச்சினையில் இருந்தார் பவதாரணி. இவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 27,28 இலங்கையில் நடைபெற இருந்தது. இளையராஜா தலைமையில் இலங்கைக்கு இசை குழுவினர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் இளையராஜா கொழும்பில் தற்போது தங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று மாலை 5.20 மணிக்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் நாளை மாலை இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.












Click it and Unblock the Notifications