இளையராஜாவிடமே அந்த நபருக்காக சண்டையிட்ட பவதாரிணி.. சமூக வலைதளத்தில் அவரே வெளியிட்ட பதிவு வைரல்
சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று முன்தினம் உடல் நல குறைவினால் காலமாகி இருந்த நிலையில் அவருடைய ரசிகர்களும், நண்பர்களும், உறவினர்களும் அவருக்காக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர் .இந்த நிலையில் பவதாரணி பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது இசையமைப்பாளர் இளையராஜாவின் செல்ல மகளான பவதாரிணி இளையராஜாவிடமே ஒரு நபருக்காக சண்டை போட்டு இருக்கிறார். அது வேறு யாருமில்லை தன்னுடைய தம்பியான யுவன் சங்கர் ராஜாவிற்காகதானாம். தன்னுடைய தம்பிக்காக வீட்டில் மட்டுமல்லாமல் தம்பியை பற்றி தவறாக பேசிய ரசிகர்களிடமும் பவதாரிணி கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிரபல இசை அமைப்பாளரின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இவருக்கு புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் இருக்கும் உண்மையே தெரிய வந்திருக்கிறது.
இத்தனை நாட்களாகவும் வயிற்று வலியில் அவதிப்பட்டு இருந்த பவதாரிணி அது குறித்து உண்மையை சரியாக குடும்பத்தினரிடம் சொல்லாமல் அலட்சியமாக இருந்ததாலேயே நோய் இவ்வளவு தீவிரம் ஆகி இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் பவதாரிணியின் மறைவால் அவருடைய குடும்பம் மட்டுமல்லாமல் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
பவதாரணி 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பாடி உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு இசையும் அமைத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இவர் பாடல் ரசிகர்களின் சோகத்தை காணாமல் போக வைத்து இருக்கிறது. அதுபோல பவதாரிணி பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னுடைய தம்பியும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவிற்கு அனைத்து விதத்திலும் பவதாரிணி உதவியாக இருந்திருக்கிறார்.ஆரம்பத்திலிருந்து யுவனை இவ்வளவு பெரிய மிகப்பெரிய இசையமைப்பாளராக உருவாக்க பவதாரணி தான் அதிக முயற்சி எடுத்துள்ளதாகவும் அதற்கு துணையாக இருந்ததாகவும் யுவன் மேடை நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் யுவனுக்கு மியூசிக் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் தான் இருந்தாராம். அப்போது பியானாவை அவரிடம் கொடுத்து இதனை நீ உபயோகித்து சீக்கிரமாக பழகிக் கொள் என்று கூறி யுவனுக்கு பியானாவை முழுமையாக கற்றுக் கொடுத்த ஆசானும் பவதாரணியாக தான் இருந்திருக்கிறார்.
அதோடு யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் இரண்டு திருமணம் செய்து மனைவியை பிரிந்து விட்டார். இவருடைய திருமணத்தின்போது இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறுவதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவருடைய அக்காவான பவதாரிணி மட்டும்தான் யுவனுக்கு சம்மதம் தெரிவித்ததோடு யுவன் முடிவு எடுப்பதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்று தன்னுடைய தந்தையிடமே சண்டையிட்டு அவருடைய மனதை மாற்றி சம்மதம் வாங்கி கொடுத்திருக்கிறார்.
பவதாரிணி தான் இளையராஜாவின் செல்ல மகள் என்பது எல்லோருக்குமே தெரியும். பவதாரிணி கூறியதால் தான் அந்த முடிவை மறுக்க முடியாமல் இளையராஜா ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அது போல யுவன் சங்கர் ராஜா முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்வதற்கு சோசியல் மீடியாவிலும் யுவனுக்கு எதிராக அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்தபோதும் பவதாரிணி தான் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவை யுவனுக்கு தெரிவித்திருக்கிறார்.
இப்படி தனக்கு எல்லாவுமாக இருந்த அக்கா பவதாரிணி உயிரிழந்ததை தாங்க முடியாமல் யுவன் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்கள் பலர் யுவனுக்கு தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications