நடிகை அமலா பாலுடன் திருமணம்.. கோர்ட்டில் ஆதாரங்களை காட்டி "மைனா"வை அம்பலப்படுத்திய பவ்நிந்தர் சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடந்த ஆதாரத்தை காண்பித்து பவ்நிந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதிலிருந்து அமலா பால் பொய் சொல்லியது அம்பலமானது.

நடிகை அமலா பாலுக்கு பவ்நிந்தர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். இதற்காக இவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அமலா பாலும் பவ்நிந்தர் சிங்கும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர் என கூறப்படுகிறது.

அமலா பால்

அமலா பால்

இந்த நிலையில் நடிகை அமலா பால் சார்பாக அவரது மேனேஜர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த போது பவ்நிந்தர் சிங் உள்ளிட்டோர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார்.

நெருக்கம்

நெருக்கம்

மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் பவ்நிந்தர் சிங் மிரட்டுவதாகவும் அமலா பால் தன் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவ்நிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்திர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி கைது செய்தனர்.

வானூர் நீதிமன்றம்

வானூர் நீதிமன்றம்


இதையடுத்து வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவரது மனு மீது நேற்றைய தினம் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலா பாலிடம் தான் அத்துமீறவில்லை என்றும் தனக்கும் அமலா பாலுக்கும் நடந்த பதிவுத் திருமணத்தின் சான்றிதழை பவ்நிந்தர் சிங் சமர்ப்பித்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் சிங் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து பவ்நிந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அமலா பால் கூறியது பொய் என்பதும் நிரூபணமாகிவிட்டது. இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அமலா பாலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+