Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக போட்ட கேஸ்.. விளம்பரத்தில் பாரபட்சமா? தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறது? ஹைகோர்ட்டில் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை ஹைகோர்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்..

Bias in Advertisements by Election Commission and DMK Case hearing in Madras High Court today

அந்த மனுவில், "மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது.

விண்ணப்பங்கள்: சில விண்ணப்பங்களை ஒன்றுமில்லாத அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளது என்றும் குறிப்பாக இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தேர்தல் விளம்பரத்துக்கு முன் அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க மறுத்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். அதேபோல திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

விசாரணை: இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக விதிமுறைகளை வகுத்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வீடியோ விளம்பரங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக கூறி, விளம்பரத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து மாநில அளவிலான குழுக்களின் முடிவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகள் 2004ம் ஆண்டு தேர்தல் வரை தான் அமலில் இருந்தது. இந்த விதிகளின் மூலம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது" என்று விளக்கமளித்தார்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், "விதிமுறைகளை எதிர்க்கும் வழக்குகளை உச்சநீதிமன்றத்தில்தான் தொடர முடியும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

இன்று விசாரணை: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "2023ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து 10 மாதங்கள் கழித்துதான், வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா?

தேர்தல் ஆணைய விளம்பரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு 2004ம் ஆண்டிற்கு மட்டும்தான் பொருந்துமா அல்லது மற்ற தேர்தல்களுக்கும் பொருந்துமா? என்று தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்" என்று கூறி, 17ம் தேதிக்கு வழக்கினை தள்ளி வைத்தனர். அதன்படி இன்றைய தினம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+