சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மிஸ்டர்" வேலுமணி கைதாகிறாரா.. இதான் திமுக.. "சாணக்கியன்" ஸ்டாலின்.. ஒரே கல்லில் 1..2..3..4 மாங்காய்

வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்க என்ன காரணம் என்பது குறித்த யூகங்கள் கிளம்பி உள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: வேலுமணி, விஜயபாஸ்கர் என 2 அதிமுக மாஜிக்களிடமும், ரெய்டுகள் இன்று திடீரென நடந்து வருகிறது.. இதற்கு காரணங்கள் என்ன என்பது குறித்த விவாதங்களும், கருத்துக்களும், யூகங்களும் வெடித்து கிளம்பி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்..

கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. அதிகாலையில் பரபரப்புஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. அதிகாலையில் பரபரப்பு

 மிஸ்டர் வேலுமணி

மிஸ்டர் வேலுமணி

இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

 டரியல் ஐடியாக்கள்

டரியல் ஐடியாக்கள்

இதனடிப்படையில், சென்னையில் அவர் தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடக்கிறது... ஒரே நேரத்தில், ஒரே நாளில் இரு மாஜிக்களிடமும் ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

PLAN + 1

PLAN + 1

அத்துடன், இந்த ரெய்டுக்கு பின்னணி என்ன என்பது குறித்த யூகங்களும் றெக்கை கட்டி பறக்கின்றன... முதலாவதாக, திமுகவின் கொங்கு ஸ்கெட்ச்தான் இதற்கெல்லாம் மூல காரணமாக சொல்லப்படுகிறது.. கொங்குவை திமுகவின் பிடிக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. இதற்கான பொறுப்பை செந்தில்பாலாஜியிடம் தந்துள்ள நிலையில், அதற்கான பலன்களும் கிடைத்து வருகின்றன.. அதேசமயம், வேலுமணியின் கோட்டையான கோவையில், திமுகவின் செல்வாக்கு அதிக அளவு எடுபடாத சூழல் உள்ளது..

 வேலுமணி

வேலுமணி

அன்று சட்டசபைக்கான கோவை பிரச்சாரத்தில், "இது தான்டா திமுக.. மிஸ்டர் வேலுமணி திமுகன்னா இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள சிறைக்குள்ளே தள்ளுவேன்" என்று ஸ்டான் பேசிய பேச்சு பலரையும் திகைக்க வைத்தது.. ஆட்சிக்கு வந்தபிறகும், இதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. முதல்வரின் சமீபத்திய கொங்கு பயணம் முடிந்த பிறகு, இதற்கான திட்டங்கள் தீவிரமாக கையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. கோவையில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த லஞ்ச ஒழிப்புத்துறையும் தயாராகி வந்துள்ளது.. இதை முன்னிறுத்தியே எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 PLAN + 2

PLAN + 2

இரண்டாவதாக, மாஜிக்கள் யாரையுமே திமுக அரசு கைது செய்யாமல் உள்ளது, பெரும் சலசலப்பையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு முன்பு நடந்த சோதனைகள் நடந்தபோதே, கைது நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவ்வாறு நடக்காததால், திமுக அரசின் ஒருவித கண்துடைப்பு தான் இந்த ரெய்டு என்றும், அதிமுக மாஜிக்களை ஒருவித பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.. இது ஸ்டாலின் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவரும்நிலையில்தான், இன்றைய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவணங்களை கைப்பற்ற களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது..

 ஃபைல்கள்

ஃபைல்கள்

இன்றைய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கினால், லஞ்ச ஒழிப்புத்துறையின் பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கும் என்றும் காவல்துறை எதிர்பார்க்கின்றனர்... ஆனால், 2 முறை ரெய்டு நடந்து ஆவணங்கள் எதுவும் சிக்காத நிலையில், 3வது முறை ரெய்டு நடத்தினால் மட்டும் எப்படி ஆவணங்கள் கிடைக்கும்? ஆதாரங்களை வேலுமணி தரப்பு இன்னுமா வைத்திருப்பர்கள்? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தவகையில், இன்றைய ரெய்டும், கண்துடைப்பாகவே அமையும் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

 PLAN + 3

PLAN + 3

மூன்றாவதாக, திமுகவுக்கு எதிராக, போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. மின் கட்டண உயர்வை கண்டித்து, இந்த போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கிறது.. இந்த முறை திமுக ஆட்சிக்காலத்தில், அதிக அளவு விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பதும், மக்களிடம் அதிருப்தியை பெற்றுவருவதும் மின்கட்டண உயர்வுதான்.. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் இத்தனை நாளும் சிக்கி தவித்து கொண்டிருந்த நிலையில், திமுகவும் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தது.. ஆனால், நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், போராட்டத்தை அறிவித்தார்.. இந்த மின்கட்டண உயர்வை மூடி மறைக்கவே இது போன்ற ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது..

 PLAN + 4

PLAN + 4

நான்காவதாக, இதுபோன்ற ரெய்டுகள் மூலம் அதிமுகவை டேமேஜ் செய்ய திமுக முயல்வதாகவும் தெரிகிறது.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே நீதிமன்ற உத்தரவுகள் சமீபகாலமாக வரும்நிலையில், கட்சியில் அவருக்கான செல்வாக்கு உயர்ந்து வருகிறது.. மதிப்பும் கூடி வருகிறது.. அதிமுகவின் இரட்டை தலைமையை மட்டுமே எதிர்நோக்கும் திமுக தரப்பு, எடப்பாடியின் விஸ்வரூப வளர்ச்சி தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் கணக்கு போடுகிறது.. அதனாலேயே எடப்பாடியின் ஆதரவாளர்களான வேலுமணி, விஜயபாஸ்கரை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஒருபக்கம் கொங்கு புள்ளிகள், மறுபக்கம் எடப்பாடி ஆதரவாளர்கள் என ஒரே கல்லில் 2 மாங்காய்களை திமுக அரசு குறிபார்த்து இந்த ரெய்டுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

English summary
Big and Secret reason for raid in SP Velumanis house and what is DMK going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X