Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திமுக மவுனம் கலையுமா.." மேட்டருக்கு வந்த அண்ணாமலை.. பாஜகவின் அஸ்திரம்.. நாளும் குறிச்சாச்சு

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் பெருகி வரும்நிலையில், திமுக அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.. அத்துடன் ஆளும் அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பானது.

இதில், பிரபாகரன், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.. இதனிடையே நேற்று முன்தினம் இன்னொரு சம்பவம் நடந்தது.. பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி...

ஜன்னல் கண்ணாடி

ஜன்னல் கண்ணாடி

இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10.30 மணிக்கு அவர்களது வீட்டிற்கு வந்த சிலர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரினை கல்லாலும், கட்டையாலும் தாக்கி சேதப்படுத்தியிருக்கிறார்கள்.. இதனால், காரின் இடது பக்கம் உள்ள முன் மற்றும் பின் டயர்களைக் கத்தியால் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.. வீட்டின் மீதும் கல் எறிந்து ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.. இந்த வன்முறை சம்பவங்களைதான் பாஜக கையில் எடுத்து, திமுக அரசை கேள்வி எழுப்பி வருகிறது.

குண்டர்கள்

குண்டர்கள்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது தொடர்பாக ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஒரு ராணுவ வீரர் திமுக குண்டர்களால் அடித்தே சாகடிக்கப்பட்டிருக்கிறார்.. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கடந்து செல்ல முயல்கிறது திமுக... நமக்காக சேவை புரிந்த ஒருவரை அடித்தே கொன்றிருப்பது கொடூரம்.. என் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன முதல்வர், ஏன் அமைதியாக இருக்கிறார்? அதிகாரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் ஒவ்வொரு திமுகவினரும் செயல்படுவதை உணர முடிகிறது" என்று காட்டமாக கூறியிருந்தார்.

நாராயணன்

நாராயணன்

இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜனும், திமுக மீது சாடியிருக்கிறார்.. ராணுவ வீரர் பிரபு நாயக் கொலை, பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீட்டின் மீது தாக்குதல், ஆலந்தூரில் காவலர் கல்லால் அடித்துக்கொலை என்று திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் விதமாக வரும் 21-ம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அதற்கு அனுமதி கேட்டு கரு.நாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சென்னை கமிஷனர் ஆபீசில் மனு ஒன்றை அளித்தனர்.

கரு நாகராஜன்

கரு நாகராஜன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், "திமுக ஆட்சி என்றாலே வன்முறை என்று அர்த்தமாகிவிட்டது.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் ஏகப்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரின் கொலை, நங்கநல்லூரில் காவலர் கல்லால் அடித்துக்கொலை, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை என தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதேபோல சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கொலை, பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீடு மீது தாக்குதல் என பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.

அடையாளம்

அடையாளம்

திமுக அடையாளத்தை பயன்படுத்தியே அவர்கள் துணிந்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை திமுக ஆட்சியில் இருக்கிறது. இந்த அநீதி ஆட்சி மற்றும் அலட்சியமான திமுக ஆட்சியை கண்டிக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்குபிறகு மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக சென்று போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செய்யவுள்ளதால் இதற்கு அனுமதி கேட்டு மனு தந்துள்ளோம். திமுக இருக்கும் இடத்தில் சுமுகமான தேர்தல் நடைபெறுவது சந்தேகம். திமுக ஆட்சி மோசமான ஆட்சி என்பது பொதுமக்களுக்கே தெரியும்" என்றார் கரு.நாகராஜன்.

மாற்று நாங்கதான்

மாற்று நாங்கதான்

கடந்த ஒருவருட காலமாகவே, திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.. தாங்கள்தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி, திமுகவுக்கு மாற்று பாஜக மட்டுமே என்று மாநில தலைவர் வலியுறுத்த தொடங்கியதில் இருந்தே இத்தகைய போராட்டங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது.. இதன்மூலம், திமுகவை டேமேஜ் செய்வதுடன், அதிமுகவுக்கும் செக் வைப்பதுபோல, தமிழக பாஜக அரசியல் வேகம் எடுத்ததாக சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஆளும் கட்சிக்கு எதிராக, அதிமுக எடுக்க வேண்டிய செயல்பாடுகளை எல்லாம் பாஜக தன்னுடைய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்களே கருத்து சொல்லி இருந்தனர்..

மாய பிம்பம்

மாய பிம்பம்

தமிழகத்தின் "எதிர்க்கட்சி" என்ற பிம்பத்தை கட்டமைத்து வரும்நிலையில், அது லேசில் நொறுங்கிவிடக்கூடாதே என்பதாலும், வரும் எம்பி தேர்தல் வரை இப்படியான பிம்பம் தொடர வேண்டி இருப்பதால்தான், இந்த முறை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் பாஜக தரப்பு தயங்கியதாக ஒரு காரணம் சொல்லப்பட்டது.. அந்தவகையில், மீண்டும் ஒரு போராட்டத்தை பாஜக கையில் எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன், திமுக தரப்புக்கும் எரிச்சலை தந்து வருவதாக கூறப்படுகிறது.. 21ம் தேதி என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்.. !!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+