Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில எடுப்பு.. பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலம் போச்சே.. இந்து முன்னணி போட்ட பகீர்.. கவனித்த திமுக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசை தொடர்ந்து குற்றஞ்சாட்டி விமர்சித்து வரும் இந்து முன்னணி முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது விடுத்திருக்கிறது. இது திமுக தரப்பின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது.. அதேபோல தமிழகத்தின் கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும் விடாமல் கேள்வி எழுப்பி வருகிறது.

Hindu Munnani Hindu Front Tamil Nadu Government

உண்டியல்கள்: சில நாட்களுக்குமுன்புகூட, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.. "கோயிலை குறிவைத்து நடக்கும் குற்றச் செயல்கள், நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 8 கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருமண மண்டபங்களில் கூட சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், கோயில்களில் பல லட்சம் மதிப்பிலான விக்ரகங்கள், நகைகள், காணிக்கை உண்டியல் இருக்கும் இடத்தில் கேமரா வைக்க வேண்டாமா? இது குறித்து காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தகுதியற்றவர்கள் இந்து சமய நம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படக் கூடாது. இப்படிப்பட்ட குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என காவல்துறை வழக்கை முடித்து வைப்பதிலேயே குறியாக இருக்கிறதே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்கறை காட்டுவதில்லை..

புகார்கள்: அறநிலையத் துறையும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல், காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தம் கொடுத்துப் பழக வேண்டும். இனியாவது தமிழக அரசும் காவல்துறையும் கோயில் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்று காட்டமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இந்து முன்னணி.. கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மறுபடியும் வலியுறுத்தியிருக்கிறது..

அத்துடன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் இந்து முன்னணி அதிரடியாக அறிவித்துள்ளது.

அறநிலையத்துறை: இதுகுறித்து, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள் இடங்கள் வீடுகள் இருக்கின்றன. கோயில்களின் வருமானம், கோயில் சொத்துக்களை பாதுகாக்க பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை.

கடந்த சுமார் 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோயில்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

கோயில் சொத்துக்கள்: மேலும் இந்து கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டுக்கு என கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நல துறைக்கு என பல வகைகளில் பகல் கொள்ளையாக கோயில் சொத்துக்களை அரசே கபளீகரம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடோ வாடகையோகூட தருவதில்லை.

அதேசமயம் அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் வைத்துள்ளன. அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட பொது பயன்பாட்டுக்கு அரசு கையகப்படுத்தியது உண்டா? அதேபோல் மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க அரசு, தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்து முஸ்லிம்களை கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது.

அரசியல்வாதிகள்: ஒருபுறம் இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர்.

பிரம்மாண்டமான கோயிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள் அதனை நிர்வகிக்க, பாதுகாக்க பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை இறைவன் பேரில் எழுதி வைத்துள்ளனர். நீதிமன்றமும் கோயில் சொத்துக்கள் கோயில் பயன்பாட்டுக்காக தான், அதனை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது கூடாது என கூறியே வந்துள்ளது.

கோயில் சொத்துக்கள்: எனவே, கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என்று இந்து முன்னணி அறிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+