"தொலைச்சிருவோம்".. பில் எங்கே?.. ரேஷன் கடைகளுக்கு மேஜர் உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. மக்கள் ஹேப்பி

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், தமிழக அரசு சவுக்கை கையில் எடுத்துள்ளது.. முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

 ஹேப்பி

ஹேப்பி

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் நேற்றுகூட, சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு பற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல் ஒன்றை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

 கருவிழி + செக்கிங்

கருவிழி + செக்கிங்

அதன்படி, ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டுவரப்படும் என்றும், அக்டோபர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் சில நியாயவிலைக் கடைகளில் கருவிழி பதிவு அடிப்படையில் பொருட்களை வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.. அதுமட்டுமல்ல, இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்திருந்தார்.

 முதல் ஸ்தானம்

முதல் ஸ்தானம்

அதேபோல சமீபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.. அதில், காந்தி ஜெயந்தி தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை கிராம சபை முன், தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம சபை கூட்டங்களில் பெறப்படும் புகார்களை ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், பெறப்பட்ட புகார் உள்ளிட்ட விபரங்களை கூட்டம் முடிந்த 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

 டாக்குமெண்ட்டுகள்

டாக்குமெண்ட்டுகள்

கிராம சபைக் கூட்டத்திலேயே, ரேஷன் கடை ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட புகார்களுக்கும் ஒரு வாரத்தில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது, ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்தது.. இப்போது இன்னொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 மார்க்கெட் + பில்

மார்க்கெட் + பில்

அதில், ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர, வேறு பொருட்களை விற்பனை செய்ய கூடாது. ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்வதையும், அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை, பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.கட்டுப்பாடற்ற பொருட்களின் விலை, வெளிச்சந்தை விலையை விட குறைவாக இருக்க வேண்டும். மக்கள் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் முறையாக, "பில்" வழங்க வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை தவறாது கடைப் பிடிக்க வேண்டும்.. தவறும்பட்சத்தில் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

 ஹேப்பி நியூஸ்

ஹேப்பி நியூஸ்

மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, ரேஷன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பொருட்களின் தரத்தை உயர்த்த கூறி உத்தரவிட்டுள்ளதும், தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளதும், பொதுமக்களின் நம்பிக்கையையும், நிம்மதி உணர்வையும் கூட்டி வருகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+