Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிறம் மாறியது".. பெண்களுக்கான இலவச "பிங்க்" கலர் பஸ்கள்.. உதயநிதி தொடங்கி வைத்தார்..குஷியில் சென்னை

மகளிருக்கான பிங்க் நிற இலவச பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல் கட்டமாக 60 பஸ்கள் 'பிங்க்" நிறத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன.. இந்த பிங்க் நிற பஸ் சேவையை தன்னுடைய தொகுதியான சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக இன்றுவரை திகழ்கிறது.

இத்தனைக்கும் அந்த சமயம் அதிமுக அரசானது, கஜானாவை காலி செய்து வைத்து போனதாக திமுக சொல்லி இருந்தது.. தமிழகத்தின் மிகப்பெரிய நிதி நெருக்கடியில்தான் முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.

 இலவச பஸ் பயணம்

இலவச பஸ் பயணம்


இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள்கூட அன்று கேள்வி கேட்டன.. வாக்குறுதியில் எத்தனையோ அறிவிப்புகளை சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தன.. ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றும் வருகின்றனர்.

 குழப்பம்

குழப்பம்

ஆனாலும், தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.. அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.. சிலசமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்கள், பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டுவிடும்.. இந்த பிரச்சனைக்குதான் தமிழக அரசு, சூப்பர் தீர்வு ஒன்றை அறிவித்திருந்தது..

 பிங்க் கலர்

பிங்க் கலர்

அதன்படி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு பிங்க் கலர் பூசப்படும் என்றும் அதற்கான வேலைகள் மும்முரமாக நடப்பதாகவும் கூறியிருந்தது. அதன்படி, பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

 நிறம் மாறுகிறது

நிறம் மாறுகிறது

முதற்கட்டமாக 50 பேருந்துகள், பிங்க் நிறம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.. இதையடுத்து, படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... பிங்க் நிறத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம் போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூடுதலாக தெரிவித்துள்ளனர். இந்த பிங்க் நிற பஸ்களை, தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவங்கிவைத்தார்.

 பிங்க் கலர்

பிங்க் கலர்


இதையடுத்து, முதல் கட்டமாக 50 பிங்க் கலர் பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.. இதே போல மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 10 மினி பஸ் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மண்டல தலைவர் மதன்மோகன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+