வண்டலூரில் வியப்பு.. தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூட வேண்டும் என்ற நிலை உள்ளபோது, புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில், கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால், இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் உள்ளாக்கி வருகிறது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரையில், தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,228 சுங்கச்சாவடிகளிலும், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகளிலும், வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் கட்டணம் உயர்வு
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2 வருடங்களில் மட்டும் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன... வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.. 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை இந்த கட்டணம் உயர்த்தப்படும்..
இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில், இன்று மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கையை ஏற்கனவே அனுப்பியிருந்தது.
புதிய கட்டணம் - அட்டவணை
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த கட்டணம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது..
வண்டலூர் டூ மீஞ்சூர் கட்டணங்கள்
- வண்டலூர்- மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.140 கட்டணம்
- இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம்
- லாரி, பஸ்கள் ரூ.470 மற்றும் 3 அச்சு வணிக வாகனங்களுக்கும் ரூ.510 ரூபாய் வரை கட்டணம்
- 4 முதல் 6 அச்சு கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.735 மற்றும் 7 முதல் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்கள் ரூ.895 கட்டணம்
- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20 கட்டணம்
- இலகுரக வணிக வாகனம் ரூ.40. லாரி, பஸ்கள் ரூ.85, 3 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.90. ரூ.130, ரூ.160 கட்டணம்
- பாடியநல்லூர்- மீஞ்சூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.15, லாரி, பஸ்கள் ரூ.75, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.80, ரூ.115, ரூ.140 கட்டணம்
- அனுமதிக்கப்பட்ட சுமையின் எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10 மடங்கு கட்டணம்

பரனூர் சுங்கச்சாவடி
இதில், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15 வருடங்கள் கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாக உள்ளது.
அந்தவகையில், தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூடவேண்டும். எனினும், கடந்த 2 வருடங்களில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது.. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு பதிலாக, புதிதாக சுங்கச்சாவடிகளை திறந்து, அதற்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது, தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications