Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் வீட்டில் தடுக்கி விழுந்த நிஷா... ரம்யா கிளாமர் அள்ளுதே

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் விருந்தினர்கள் உற்சாகமாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள். ஓடிப்பிடுத்து விளையாடும் விளையாட்டில் தடுக்கி விழுந்து அடிபட்டுக்கொண்டார் அறந்தாங்கி நிஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 கலகலப்பாக தொடங்கி விட்டது. கமல் ஸ்டைலாக மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு கெத்தாக விருந்தினர்களை அழைக்க ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்று விட்டார்கள். கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் வீடு கலர்புல்லாக இருக்கிறது. வீட்டிற்குள் நுழைந்திருக்கும் விருந்தினர்கள் ஒற்றுமையாக ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டனர். விரட்டுகிறேன் என்று முதல்நாளே தடுக்கி விழுந்து விட்டார் நிஷா.

பிக்பாஸ் வீட்டிற்குள் ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி தவிர இளசுகள் பட்டாளம்தான். ரியோ, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், சோம்சேகர், ஆரி, ஆஜீத், அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் என கலகலப்பாக இருக்கிறது வீடு.

Big Boss 4 Aranthangi Nisha who fell in the house Ramya Pandian is glamorous

இதோ முதல்நாளில் ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பமாகி விட்டது பிக்பாஸ் வீடு. ரியோவும் நிஷாவும் வந்த உடனே தங்களின் கலகலப்பை ஆரம்பித்து விட்டனர். ஒருவரை ஒருவர் கலாய்ப்பதில் கில்லாடிகள் இந்த வீட்டில் கலகலப்பை ஏற்படுத்துவதற்கு இந்த இருவர் போதும்.

சுரேஷ் சும்மாவே வைத்தி வைப்பதில் கில்லாடி. இதில் என்ன பட்டாசு கொளுத்தி போட்டு யாரை வேக வைக்கப் போகிறாரோ. எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளாமல் இப்போதைக்கு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

https://twitter.com/vijaytelevision/status/1313050617917579267

புதிதாக வெளியாகியுள்ள புரமோவில் கலர் விளையாட்டு விளையாடுகிறார். ரம்யா பாண்டியன் ரொம்பவே கிளாமராக இருக்கிறார். அவர் மையமாக நிற்க என்ன வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்ல நகை வேண்டும் என்று ரம்யா சொல்ல என்ன நகை என்று என்று எல்லோரும் கேட்க அதற்கு கலர் நகை என்று சொல்கிறார் ரம்யா. என்ன கலர் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்க ஆரஞ்ச் என்று கேட்கிறார் எல்லோரும் ஓட இவர் விரட்டி பிடிக்கிறார். மாட்டியது நிஷாதான்.

நிஷாவும் அதே போல கேட்டு விரட்ட அதே போல எல்லோரும் ஓட கீழே விழுந்து காலை தடவிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். எல்லோரும் பதறிப்போய் நிஷாவை சூழ்ந்து நிற்கிறார்கள். அட விடுங்க விடுங்க நிஷாக்கா அடிக்கடி கீழே விழுவாங்க என்று கேசுவலாக சொல்லி சிரிக்கிறார் ரியோ ராஜ்.

முதல் நாள் அப்படித்தான் இருக்கும் அப்புறம் போக போகத்தான் யார் கூட யார் கூட்டணி சேர்ந்து கொண்டு பஞ்சாயத்தை இழுப்பார்கள் என்று தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+