பிக்பாஸ் நடிகர் தர்ஷன் கைது.. நீதிபதியின் மகன் அளித்த புகார்.. கார் பார்க்கிங் தகராறு..என்ன நடந்தது?
சென்னை: கார் பார்க்கிங் தொடர்பான தகராறில் நீதிபதி மகனை தாக்கியதால் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் இருவர் மீதும் பெண் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தர்ஷன் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று கார் பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக நடிகர் தர்ஷன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முகப்பேர் பகுதியில் வசிக்கும் தர்ஷன் வீட்டின் அருகே கார் பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் நீதிபதியின் மகனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நீதிபதியின் மகன் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இதில் காயமடைந்த நீதிபதி மகன் ஆத்திசூடி மற்றும் மகேஷ்வரி ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் இருவர் மீது ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகராறு தொடர்பாக நடிகர் தர்ஷன் தரப்பில் புகார் அளித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தற்போது நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவரையும் கைது செய்திருக்கின்றனர். தர்ஷன் வீட்டின் அருகே கார் பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றதால், தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் நீதிபதி மகன் ஆத்திசூடியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தர்ஷன் கொடுத்த புகாரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் தர்ஷன் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பார்க்கிங் தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications