"புரிஞ்சுக்குங்க".. ஸ்டாலினால் "ஸ்டன்" ஆன திமுக.. முதல் மணியை அடித்த திருச்சி.. மிரண்ட பாஜக.. சபாஷ்!
அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுகவில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட துவங்கிவிட்டது.. இந்த முழுமுதற் மாற்றத்துக்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான்.. இதனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் கிடக்கிறதாம்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு பேசிய பேச்சு, மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.. அவர் பேசும்போது, "இன்றைக்கு தமிழக கவர்னர் எதிர்க்கட்சியைப்போலச் செயல்படுகிறார். அதேபோல பாஜகவினர் ஒரு சின்ன விஷயத்தைக்கூட ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
ஏதோ இந்த நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கு இல்லை என்கிற ஒரு மாயையை உருவாக்கக்கூடிய அளவுக்கு ஊடகங்களை, பத்திரிகையாளர்களை மிரட்டி பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

40+ போயிடும்
எப்படியும் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியான அதிமுக, "நீதான்... நான்தான்" என்று இன்றைக்கு பிளவுபட்டுக் கிடக்கிறது. அவர்கள் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தோடு பாஜகவினர் அதிமுகவை ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நான் வெளிப்படையாக, வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்... இன்றைக்கு இருக்கிற அதிகாரிகள் மத்திய அரசுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். நாம் இப்போது பலமாக இருப்பதைப்போல் தொடர்ந்து பலமாக இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றிபெற வேண்டும்.

கவனம் ஜாக்கிரதை
கடந்தகாலத்தைவிட மிகக் கடுமையான காலம் இது. கடந்தகாலம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அண்ணன், தம்பிக்கு இடையே இருக்கிற போட்டியைப்போல. ஆனால், இன்றைக்கு சகல அதிகாரத்தையும் வைத்திருக்கிறவர்களோடு எதிர்த்து நிற்கிற போட்டியாக இருக்கிறது. எனவே, நாம் மிக மிக கவனமாகச் செயல்படக்கூடிய காலம் இது" என்றார்.. நேருவின் இந்த பேச்சு மிகப்பெரிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.. அதிகாரிகள் உண்மையிலேயே மத்திய அரசுக்கு பயப்படுகிறார்களா? அப்படியானால் இது திமுக அரசின் தோல்வியா? பாஜகவை எதிர்க்க முடியாமல் திமுக திணறுகிறதா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி வருகிறார்கள்.

அட்வைஸ்கள்
ஆனால், உண்மையிலேயே நேரு அப்படி பேசியதற்கு பின்னணி காரணம் வேற இருக்கிறது என்கிறார்கள்.. எப்போதுமே திமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்றாலும்,கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த அழுத்தம் இன்னும் அதிகமாகிவிட்டதாம்.. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுக்கு சில அட்வைஸ்களும் முதல்வர் தரப்பில் இருந்து பறந்ததாம்.. அதன்படி, எந்த ஒரு சின்ன விஷயம் என்றாலும், அதை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடும் வேலைகளில் பாஜக இறங்கிவிட்டது..

ஸ்டிரிக்ட்
சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது.. இப்படிப்பட்ட நேரத்தில் கோஷ்டி மனப்பான்மையுடன் நீங்கள் எல்லாம் செயல்பட்டால், அது நமக்குதான் நஷ்டம்.. எம்பி தேர்தலில் பல தொகுதிகளை நாம் இழக்க நேரிடும்.. அதனால், இதுபோன்ற ஆபத்துகளை இனியும் புரிந்துகொள்ளாமல் கோஷ்டி அரசியல் நடத்தினால், எனக்கு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று சற்று கறாராகவே அறிவுறுத்தப்பட்டதாம்.

பறந்த போன்கால்
இந்த அட்வைஸைதான், திமுக மா.செ.க்கள், அமைச்சர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனராம். அதன் முதல் மணியைதான் திருச்சியில் நேரு, நேற்றைய தினம் அடித்துள்ளதாக சொல்கிறார்கள்.. சில வருடங்களாகவே, திருச்சியில் நிறைய உட்கட்சி பூசல் வெடித்து வந்தது.. சீனியரா? ஜுனியரா? என்ற ஈகோவும் நீடித்து வந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஜூனியரான அன்பில் மகேஷை போனை போட்டு, நேரடியாகவே கூப்பிட்டாராம் சீனியரான நேரு...

ஜூனியர் + சீனியர்
இதை அன்பில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. இன்ப அதிர்ச்சியாக அந்த போன் வந்ததால், மறுத்துப் பேசாமல், மற்ற வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு, உடனடியாக வந்து நேருவின் கூட்டத்தில் கலந்து கொண்டாராம்.. அதுமட்டுமல்ல, அண்ணன் நேரு எங்களுக்கு துரோணாச்சாரியார் போன்றவர்.. அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்" என்று பேசி இணக்கம்காட்டிவிட்டார்.. அத்துடன், முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கும் அனைவருமே கீழ்ப்படிந்தும் விட்டனர்.. சபாஷ் திமுக..

ஜூனியர்ஸ்
இதை முன்னுதாரணமாக கொண்டு, அடுத்தடுத்த மாவட்டங்களிலும், இணக்கமான நிகழ்வுகள் நிகழ போகிறதாம்.. முக்கியமாக, பல்வேறு மாவட்டங்களில் சீனியர்கள்தான், முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிவிடுவதாகவும் ஒரு பேச்சு உள்ளதால், இப்படியான மாற்றங்கள் முதலில் சீனியர்களிடம் இருந்தே துவங்க போகிறதாம்.. அதுமட்டுமல்ல, இப்படி சொந்த மாவட்டத்துக்குள் இணக்கமாக செயல்படுவதால், உள்ளடி வேலைகளுக்கு இடமே இல்லாமல் அரசியல் செய்ய முடியாமல் எதிர்க்கட்சிகள் திணற ஆரம்பித்துள்ளது, திமுக தரப்பில் மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்..!!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications