Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்.. மீண்டும் எகிறுதா சம்பளம்.. அதுவும் ஜூலையிலே..மத்திய அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்..

big good news for Central government employees and to get fitment factor hike soon

அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அகவிலைப்படி: மேலும், 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வானது, 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருவதால், இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. அதேபோல, இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்திலும் உயர்வு வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.. அதாவது, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.. இப்போதைக்கு 2.57 சதவீதம் பிட்மெண்ட் ஃபாக்டரை ஊழியர்கள் பெற்று வருகின்றனர்.. அதன்படி ரூ.18,000 குறைந்த பட்ச ஊதியமாகவும், ரூ.58,000 அதிகபட்ச ஊதியமாகவும் உள்ளது.

இந்த 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை, 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாகும்.. ஊழியர்களின் கோரிக்கையையடுத்து, பிட்மெண்ட் ஃபாக்டரை அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாம். ஒருவேளை, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000ல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும்..

அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+