சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜாக்ரதை".. சாயுதாம்.. உடையுதாம்.. அதுபாட்டுக்கு போகுதாம்.. அதுவும் நடுரோட்டில்.. மாட்டுத்தாவணியில்!

: மதுரை அரசு பஸ்ஸின் பாகங்கள் கழண்டு கீழே விழுந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஓடும் பஸ்ஸில் இருந்து ஒவ்வொன்றாக கழன்று கீழே விழுந்தன அதன் பாகங்கள்.. இவைகளை கண்டக்டரும் டிரைவரும் சிரித்துக்கொண்டே சேகரித்த வீடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.. அதேசமயம், திமுக அரசின் போக்குவரத்து துறையான, பல்வேறு அறிவிப்புகளை மக்கள் பலன்பெறும் வகையில் அறிவித்தாலும், சில விமர்சனங்கள் ஆளும் தரப்பு மீது எழுவதை தடுக்க முடியவில்லை.

இதனால் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவீதியில் நின்று விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் அதிமுக, திமுக என இரு அரசு ஆண்ட காலங்களில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறன்றன.

 டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா- வாரி வழங்கும் வள்ளலாக 7 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா- வாரி வழங்கும் வள்ளலாக 7 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து

 ரிப்பேர் + லைட்

ரிப்பேர் + லைட்

தற்போதைய திமுக அரசிலும் இந்த நிலை தொடர்கிறது.. பஸ்கள் நிறைய பழுதுகள் அடிக்கடி ஏற்படுவதாக கூறுகிறார்கள்.. பஸ்ஸின் முகப்புவிளக்கும் அதன் டிம், பிரைட் சுவிட்ஸூம், பின்புற சிவப்பு விளக்கும், இடவலம் பார்க்கும் கண்ணாடிகளும் சரியாக இருந்தாலே, பெரும்பாலான விபத்துகளை தடுத்திருக்கமுடியும்.. ஆனால் இவைகளை முறையாக பராமரிப்பதில்லை என்கிறார்கள்.. இதன்காரணமாக பஸ்கள் பாதி வழியில் நின்றுவிடும் சூழல் உள்ளது.. இதனால், பஸ் பயணிகளே கீழே இறங்கி பஸ்ஸை தள்ளிசெல்லும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது.

 பஸ் சீட்டுகள்

பஸ் சீட்டுகள்

பராமரிப்பு இல்லாமல் பஸ் சீட்டுகளில் சேதம், படிக்கெட்டுகளில் ஓட்டை என எத்தனையோ அவல நிலை ஏற்படுகிறது.. இதுகுறித்து புகார்கள் சொன்னாலும், அவைகள் சரிசெய்யப்பட்டாமல் உள்ளதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.. அந்தவகையில் மதுரை கோட்டத்தில் இதுபோன்று பல புகார்கள் பல முறை எழுந்துள்ளன.. இங்கேயும் நிறைய பேருந்துகள் சீர்செய்யப்படாமலேயே இயக்கப்பட்டு வருகின்றன.. இன்றும்கூட இப்படி பராமரிப்பு இல்லாத ஒரு பஸ் சென்றுள்ளது..

 மாட்டுத்தாவணி

மாட்டுத்தாவணி

பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து அவனியாபுரம் தெற்கு வாசல் வழியாக மாட்டத்தாவணி வரை இயக்கப்படும் TN58 N 14817 என்ற அரசு பஸ், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.. அப்போது பஸ்ஸின் பக்கவாட்டு இரும்புக்கதவு நடுவழியிலேயே கழண்டு டமார் என கீழே விழுந்துவிட்டது.. இதைதொடர்ந்து இரும்பு பலகை, கம்பிகள் என ஒவ்வொன்றாக கழண்டு கழண்டு விழுந்தன.. இதனால் பஸ் தடுமாறியது. பஸ்ஸில் இருந்து, பாகங்கள் கீழே விழுந்து வருவதை, பின்னால் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் கவனித்து சுதாரித்து கொண்டனர்.. இல்லாவிட்டால், பஸ்ஸில் மோதி பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்..

 ஸ்பேர் பார்ட்ஸ்

ஸ்பேர் பார்ட்ஸ்

இப்படி ஒவ்வொரு பாகமும் கீழே சிதறியதையடுத்து, அந்த பஸ் டிரைவரும் , கண்டக்டரும் சிரித்துவிட்டனர்.. ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டே, பஸ்ஸில் இரந்து கீழேஇறங்கி, சாலையில் சிதறி கிடந்த பாகங்களை ஒவ்வொன்றாக சேகரித்தனர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு, இனியாகிலும், இது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 லைசென்ஸ்

லைசென்ஸ்

மேலும், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்லும், தனியார் பள்ளி பஸ்களுக்கு ஆய்வுசெய்ய தமிழக அரசு தனிக் குழு அமைத்துள்ளதை போலவே, அரசு பஸ்களுக்கும் தனிக்குழுக்களை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே, வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்ஸிற்கு தகுதிச்சான்று வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற வேண்டுகோளும் சேர்ந்தே எழுகிறது.

English summary
Big Issue in Transport Dept and pats of the Madurai gov bus that fell off in the middle of the road மதுரை அரசு பஸ்ஸின் பாகங்கள் கழண்டு கீழே விழுந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X