டபுள் ஷாட்.. 2 கட்சியையும் ஒரு கை பார்க்கலாம்.. ‘வாரிசு’ புள்ளியை இழுக்கும் லீடர்! ஆஹா!
சென்னை: ஆளுங்கட்சியில் முக்கியமான பேச்சாளராகவும், தலைமைக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் டெல்லி புள்ளியின் வாரிசு, சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் தேசியக் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அவர், விரைவில் எதிர்க்கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் சிறகடிக்கின்றன.
ஆளும் கட்சியில் முக்கியமான பேச்சாளராகவும், தலைமைக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி, மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தாதவர். டெல்லியில் கட்சியின் முக்கிய முகமாக இருக்கிறார். அவரது மகனுக்கும், அவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி, கட்சித் தலைமையின் குடும்பத்தினரை விமர்சித்து வந்தார்.

பின்னர், தேசியக் கட்சியின் மாநில தலைவர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, தேசிய கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. மாநில தலைவரின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்து வந்தார். ஆனால், அவரது வாய்த் துடுக்கால், கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் ஏகத்துக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு வந்தது.
கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசியதாக ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பின்னர், கட்சி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது. ஆனாலும், மாநில தலைவருக்கு நெருக்கமான வேறொரு குரூப், டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து, அந்த நபரால் கட்சிக்கு கெட்ட பெயர் என்று கூறி, கட்சியில் இருந்து ஓரங்கட்ட வைத்தது.
இதனால், மாநில தலைவரின் ஆதரவாளர்களே இரு தரப்பாகப் பிரிந்து சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டனர். "எங்க அண்ணனுக்கு நான் தாண்டா செய்வேன்" என்பது போல, மாற்றி மாற்றி விமர்சித்து தன்னையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியதால், பதறிப்போன மாநில தலைவர், "என்னால உங்கள காப்பாத்த முடியாது" என கைவிரித்துவிட்டார்.
இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் உண்மையாக விசுவாசம் காட்டிய நபரே தன்னை புரிந்துகொள்ளவில்லை என்பது போல பேசியிருந்தார் அந்த வாரிசு புள்ளி. ஆனால், அதன் பிறகும் மாநில தலைமையிடம் இருந்து, எந்த ஆதரவான சிக்னலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தூது விட்டுப் பார்த்தவர், இப்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அதாவது, தேசிய கட்சி உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தேர்தலுக்கு தயாராகி வரும் கட்சியில், அந்த வாரிசு புள்ளி இணைய இருக்கிறாராம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஒற்றைத் தலைமையைச் சந்தித்து, கட்சியில் சேர இருக்கிறாராம். பேச்சில் புலியான அவரை வைத்து, தேசிய கட்சியையும், ஆளுங்கட்சியையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற கணக்கில் தலைவரும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில், சந்திப்பு நடக்கும் எனக் கிசுகிசுக்கிறார்கள் நெருக்கமான வட்டாரத்தினர்.
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
விசிகவில் 3 சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் மறுப்பு.. நேரடியாக களமிறங்கும் திருமாவளவன்.. பாவம் ஷாநவாஸ்! -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்!












Click it and Unblock the Notifications