சல்லி சல்லியா டமார்.. சிவகங்கையில் "குக்கர்" கூவுதா? அண்ணாமலைக்கு கை கொடுக்கும் 2 சமூகம்.. பலே பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் விரிவடைந்து வரும்நிலையில், தென் மண்டலங்களில் அதன் குறி அழுத்தமாகவே விழுந்துள்ளது. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் இந்த முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் காலூன்ற வேண்டி, கடந்த 2 வருடங்களாகவே தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Can TTV Dinakaran get 5 seats from BJP alliance and what are the BJPs 2 Master Plan in Southern Region


ஓபிஎஸ் :
இதன்காரணமாக, மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் போன்றோரை தன்னுடைய ஆதரவில் வலுவாகவே வைத்து வருகிறது.. மற்றொருபுறம் சசிகலாவுக்கான அரசியல் வேகத்தையும் அதிகரிக்க செய்துள்ளது.

டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த ஒரு வருடமாகவே தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசிவந்தார். ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலை அமமுக சந்திக்கும் என்று சொல்லிவந்தாரே தவிர, அந்த தேசிய கட்சி பாஜக என்று வெளிப்படையாக சொல்லவில்லை. எனினும், பாஜகவுடனேயே தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும், எப்படியும் 4 சீட்டுகளை பாஜகவிடம் கேட்டு பெற்றுவிடுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரபரத்தன.

22 தொகுதிகள்: நேற்றையதினம், தங்களுக்கு சாதகமாக உள்ள 22 தொகுதிகளை பாஜகவிடம் லிஸ்ட் போட்டு தந்திருக்கிறதாம் அமமுக.. இதில், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன.. குறிப்பாக, ராமநாதபுரம் தொகுதி தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியிருக்கிறாராம். அதேபோல, தேனி அல்லது சிவகங்கையையும் கேட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த முறை தேர்தலில் தினகரன் போட்டியிட போவதில்லை என்றாலும், தன்னுடைய ஆதரவாளர்களை களம் இந்த 3இடங்களை கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் தினகரனுக்கு தேனி தொகுதி கிடைக்குமா? என்று தெரியவில்லை. காரணம், இந்த தொகுதியை ஓபிஎஸ் மகனுக்கு ஒதுக்க பாஜக யோசித்து வைத்திருக்கிறதாம்.

3 சீட்டுக்கள்: அதாவது, ஓபிஎஸ்ஸுக்கு 3 சீட், தினகரனுக்கு 2 சீட் தர பாஜக திட்டமிட்டுள்ளதாம். இதில், தேனி தொகுதியை பொறுத்தவரை, உள்ளடக்கிய பகுதிகளில் டிடிவி தினகரனுக்கும் செல்வாக்கு அதிகம் உள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கும் செல்வாக்கு அதிகமாக உள்ளதால், பாஜக யாருக்கு ஒதுக்க போகிறது என்று தெரியவில்லை. அந்தவகையில் எதிர்பார்த்த தொகுதி தினகரனுக்கு கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

சிவகங்கை, திருச்சியை மட்டுமே அமமுகவுக்கு பாஜக ஒதுக்க நினைக்கிறதாம்.. 22 சாதகமான தொகுதிகளை லிஸ்ட் போட்டு தந்தாலும், குறைந்தது 10 சீட்டுக்களையாவது அமமுக எதிர்பார்த்தாக தெரிகிறது.. ஆனால், வெறும் 2 மட்டுமே ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.. அதனால்தான், பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டாலும்கூட குக்கர் சின்னத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதிலும் அமமுக தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இரட்டை இலை: ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு அப்படியில்லை.. இரட்டை இலை சின்னத்தையே நிலைநாட்டி பேசி வருகிறார் என்றாலும், சின்னம் கிடைப்பது அவ்வளவு எளிதாகிவிடுமா? என்று தெரியவில்லை. காரணம், இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைத்து, இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓபிஎஸ் கணக்கு போடலாம்.

அப்படியே கணக்கு போட்டாலும் 2 தரப்புக்கும் சாதகமாகவே நீதிமன்ற முடிவு இருக்குமே தவிர, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்தவகையில், தாமரை சின்னத்திலேயே தேர்தலை சந்திக்க ஓபிஎஸ் தயாராகவே நிறைய வாய்ப்புள்ளதாம்.

சின்னம் பிரச்சனை: சின்னம் பிரச்சனை இப்படி இருந்தாலும், பாஜகவை பொறுத்தவரை, தென்மாவட்டத்தில் பெரிய பிளான்களை கையில் எடுத்துள்ளது.. சுருக்கமாக சொல்லப்போனால், தேவேந்திர குல வேளாளர்கள் + இந்து நாடார்கள் ஓட்டுக்கள் தங்களுக்கு கணிசமாக இருப்பதாக தமிழக பாஜக கருதுகிறது.. இது தொடர்பான டேட்டாவையும் மாநில தலைவர் தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறாராம்.

மற்றொருபுறம், தினகரன், ஓபிஎஸ்ஸை வைத்து முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்றும் பாஜக கணக்கு போடுகிறதாம்.. இப்படி இருவேறு மாஸ்டர் பிளான்களுடன் தென்மாவட்டங்களை குறிவைத்திருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திமுக: இதில், திமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.. தேனியில் ஏற்கனவே உள்கட்சி பூசல் நிலவுகிறது.. திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதாகவும் பூசல்கள் வெடித்து வருகின்றன.. பலர் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.. அதைவிட முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+