Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.. அரபிக்கடலில் சூறாவளி.. மொத்தம் 5 நாட்களுக்கு அடைமழை.. எங்கெல்லாம் தெரியுமா.. வந்தது அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புயல் சின்னம் ஆந்திரா வடக்கு கடலோர பகுதியிலும், ஒடிசா புவனேஸ்வர் துறைமுகத்தில் இருந்து வடமேற்கில் 100 கி.மீயில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது..

 புயல் - வங்கக்கடல்

புயல் - வங்கக்கடல்

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.. இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. இந்த மழைப்பொழிவு தொடரும் என்று அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில், நேற்றுகூட அறிவிப்பு வெளியானது.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

 குமரி மாவட்டம்

குமரி மாவட்டம்

ஆகஸ்ட் 11 முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்துக்கு கனமழை பெய்ய உள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 ஆய்வு மையம்

ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Recommended Video

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 38,765 கன ஆடி நீர் திறப்பு.
    சூறாவளி

    சூறாவளி

    சென்னையைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+