இதுதான் அதிரடி.. கோவில் செல்பவர்களுக்கு மிக முக்கிய செய்தி.. அமைச்சர் சேகர்பாபுவின் புது உத்தரவு
சென்னை: தமிழ்நாடு கோவில்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபுவின் முன்னெடுப்பின் மூலம் கோவில்களில் புதிய வசதி ஒன்று அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதோடு கோவில் நிலங்கள் கடந்த 4 மாதங்களில் ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயில்களுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
கோவில் சொத்து: இது போக கோவில் நகைகளை வைத்து, கோவில்களுக்கு மேலும் வருமானம் ஈட்டும் வழியை அவர் ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்து பணிகளை மேற்கொண்டார். அதன்படி கோவில் நகைகளை மீட்டு அதை வங்கிகள், வைப்பு நிதிகள் அடிப்படையில் சேமிக்கவும், அதன் மூலம் வருமானம் ஈட்டி, அதை கோவில் பணிகளில் பயன்படுத்தவும் அமைச்சர் சேகர் பாபு முடிவு செய்துள்ளார்.
சிறப்பு கட்டணம்: தமிழ்நாட்டில் கோவில்களில் பக்தர்கள் எளிதாக வழிபாடு நடத்தவும், பணிகளை செய்துவிடும் வழி வகுக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. முக்கியமாக கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் முறை கைவிடப்படும். இந்த முறை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சிறப்பு தரிசன கட்டணம் விலை குறைக்கப்படும்.
சமீபத்தில் தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு தரிசன முறை பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது சிறப்பு தரிசனம் பெயரில் கூடுதல் பணம் கொடுத்து வழிபாடு செய்யும் முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறையை கைவிட வேண்டும். கோவில்களில் எல்லோரும் சமம் என்ற நிலை வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதோடு இந்த சிறப்பு தரிசன முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அந்த முறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க போவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
புதிய முறை: இதற்கு இடையில் தனது துரையின் செயல்பாடுகளை மேம்படுவதற்காக அமைச்சர் சேகர்பாபு HR&CE மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். கோவில்களில் பராமரிப்பு பணிகள், கிராமப்புற கோவில்களில் 'ஒரு கால பூஜை', அதிகாரிகளின் ஸ்பாட் ஆய்வு மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் கண்காணிக்க இந்த ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கிராமப்புறங்களில் 15,000 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த செயலியை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படுகிறதா என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம். பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஆப் மூலம் கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் முடியும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications