"கருவாடு" மீன் ஆகுதா.. ஓபிஎஸ் நிறம் மாறுகிறாரா.. பஞ்ச தந்திர வலைக்குள் சிக்கிய எடப்பாடி.. அப்பறம்?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வடமாவட்டங்களில் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த போகிறாராம்
சென்னை: ஓபிஎஸ் மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.. இது எடப்பாடி பழனிசாமி தரப்பை யோசிக்க வைத்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்துள்ளனர்..
தற்சமயம் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறார். சட்டரீதியான விவகாரங்களில் இனி கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

1 + ஐடியா
மற்றொருபக்கம் கட்சி ரீதியான சில விஷயங்களையும் முன்னெடுத்துள்ளார்.. அந்தவகையில், முதலாவதாக, மாவட்டங்களுக்கும், தங்களுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, துரிதப்படுத்தி வருகிறார்.. இரண்டாவதாக, புதிய நிர்வாகிகளை விரைவாக நியமிப்பதுடன், மாவட்ட வாரியாக ஓபிஎஸ் சுற்றுப்பயணமும் செல்ல திட்டமிட்டுள்ளார்... மூன்றாவதாக, வரும் 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மாநாடு நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். நான்காவதாக, தன்னுடைய சுற்றுப்பயணத்தில், முக்கிய ஆதரவாளர்கள், நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 2000 பேரையாவது நேரில் சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்..

5 + ஐடியா
இந்நிலையில், ஐந்தாவதாக, ஓபிஎஸ் வேறு ஒரு திட்டத்தையும் கையில் எடுத்துள்ளாராம்.. அதன்படி, தன்னுடைய பலத்தை தமிழகம் முழுவதும் நிரூபிக்கவும் போகிறாராம்.. காரணம், இத்தனை காலமாக கொங்கு மண்டலத்தில் மட்டும் கோலோச்சிவந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த ஒரே மாதத்தில், தெற்கிலும் செல்வாக்கை காட்ட ஆரம்பித்துவிட்டதுதான்.. கொங்கு முகம் என்று தெரிந்தும், வன்னியர்களின் 10.5 இடஒதுக்கீடு விஷயத்தில் அதிருப்தி உள்ளது என்று தெரிந்தும், எடப்பாடி துணிந்து தெற்கில் ஆளுமையை செலுத்த முயன்றார்..

ராஜதந்திரம்
இதற்காக, உதயகுமார் போன்ற விசுவாசிகளை பக்கத்தில் வைத்து கொண்டு, மிக மிக முக்கியமான போஸ்டிங்குகளையும் ஒதுக்கி, அதன்மூலம் முக்குலத்தோர் சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் ராஜதந்திரம்தான் பலரையும் வியக்க வைத்து வருகிறது. இந்த விஷயம் ஓபிஎஸ்ஸுக்கே கொஞ்சம் ஷாக்தானாம்.. எவ்வளவுதான் முயன்றாலும், கொங்கு கலர் எடப்பாடி மீது முழுமையாக நீங்காது என்றாலும், அந்த அளவுக்கு திமுக அங்கு லேசில் விட்டுவிடாது என்றாலும், தற்சமயம், முக்குலத்தோர் மத்தியில் எடப்பாடிக்கான கிரேஸ் ஓரளவு கூடியுள்ளது என்றே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

PLAN சக்ஸஸ்
கிட்டத்தட்ட இதே பாணி ரூட்டைதான் ஓபிஎஸ் எடுக்க போகிறாராம்.. எடப்பாடிக்கே சம்பந்தமே இல்லாத தென்மாவட்டங்களில் ஆதரவை அள்ளிவருவதைபோல, ஓபிஎஸ்ஸுக்கு சம்பந்தமே இல்லாத வடமாவட்டங்களில், ஆதரவை அள்ள போகிறாராம்.. அதாவது வடமாவட்டங்களில் ஏற்கனவே எடப்பாடி கோலோச்சி உள்ள நிலையில், இங்குதான் ஓபிஎஸ் தன் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளாராம்.. இதற்காக, வடக்கில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் பிளான்கள் நடக்கிறதாம்..

நிறம் மாறாத ஓபிஎஸ்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த 2014 எம்பி தேர்தல் பிரச்சாரத்தை, வடமாவட்டமான காஞ்சிபுரத்திலிருந்து தான் தொடங்கினார்... அதே ரூட்டை பிடித்தால், தனக்கும் சென்ட்டிமென்ட்டாக இருக்கும் என்று ஓபிஎஸ் கணக்கு போடுகிறாராம்.. காஞ்சிபுரத்தை ஃபோகஸ் செய்துள்ள அதேசமயம், சென்னையிலும் பொதுக்கூட்டத்தை நடத்தலாமா என்ற யோசனையும் நடந்து வருகிறதாம்.. ஏற்கனவே அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி இதே காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சியை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். அதுதான் இந்த விழாவா? அல்லது காஞ்சிபுரத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்திவிட்டு, பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டமிடுகிறார்களா என்று உறுதியாக தெரியவில்லையாம்.

கருவாடு
அதேசமயம், வடமாவட்டங்களில், பலத்தை நிரூபிக்க போவது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை.. அண்ணா பிறந்தநாள் விழாவை, கோவையில் நடத்துவதாகதான் முன்னதாக பிளான் இருந்தது.. ஆனால், அதீத செல்வாக்கை எடப்பாடி கொங்குவில் பெற்றுள்ள நிலையில், ஓபிஎஸ் மாநாடு நடத்தி, கூட்டம் சேராவிட்டால் என்னாவது? என்று நினைத்துதான், காஞ்சிபுரத்துக்கு இடத்தை மாற்றியதாக சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், எடப்பாடி தென்மண்டலத்திலும், ஓபிஎஸ் வடமாவட்டங்களிலும் அபரிமிதமான ஆதரவை எந்த காலத்திலும் பெற போவதில்லை, இவர்களின் நிறம் மாற போவதில்லை, கருவாடு மீன் ஆக போவதில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications