"ஆடு புலி ஆட்டம்".. அமித்ஷா கைக்கு போன ரகசிய "ஃபைல்".. இதுல இவ்ளோ இருக்கா.. எடப்பாடி வைக்கும் செக்?

அமித்ஷாவை சந்தித்து ஓபிஎஸ் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னை வந்துள்ள அமித்ஷாவிடம், முக்கிய மெசேஜ் ஒன்று பாஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அது என்ன?

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் பாஜக முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், வழக்கம்போல், இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருவதால், உட்கட்சி பஞ்சாயத்தும் தீரவில்லை.. கூட்டணி விவகாரமும் துவங்கப்படவில்லை.

 க்ளைமேக்ஸ்

க்ளைமேக்ஸ்

எனவே, நேற்றைய தினம், இருவருமே மோடியிடம் பேசி பிரச்சனைக்கு முடிவுகட்ட திட்டமிட்டார்கள்.. ஆனால், இருவரையும் சேரும்படி, அழுத்தமான சிக்னல் தந்துவிட்டு கிளம்பி சென்றுள்ள நிலையில், இன்று அமித்ஷா சென்னை வந்துள்ளார்.. அநேகமாக ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசுவதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவிடம் பாஜக தரப்பில் என்னென்ன பேசப்போகிறார்கள்? அமித்ஷா என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

 சங்கடம் A

சங்கடம் A

அதேசமயம், எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.. இதற்கு பல்வேறு காரணங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. நாமக்கல் கூட்டத்தில், மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது, டெல்லி வரை தகவல் சென்றுவிட்டதாம்.. இப்படி திடுதிப்பென்று எடப்பாடி அறிவித்தது, மேலிடத்தை சங்கடப்படுத்தியதாக சொல்கிறார்கள்.. காரணம், கூட்டணியை முடிவு செய்வதும், இறுதி செய்வதும், கூட்டணி தலைமைதான், அந்த கூட்டணி தலைமை பாஜக என்பது இங்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.. கடந்த தேர்தலிலும் இப்படித்தான், முதல்வர் யார் என்பதை கூட்டணி தலைமை முடிவு செய்யும் என்று எல்.முருகன் முதல் வானதி வரை சொல்லி கொண்டிருந்தனர்.

 சங்கடம் B

சங்கடம் B

சட்டசபை தேர்தலில், மத்திய பாஜகவின் ரோல் குறைவு என்றாலும், இறுதி முடிவு எடுப்பது தாங்கள்தான் என்பதில் பாஜக விட்டுக்கொடுக்காமல் உள்ளது.. சட்டசபை தேர்தலுக்கே அப்படி என்றால், எம்பி தேர்தலில், கூட்டணி முடிவை பிறர் எடுக்க விட வாய்ப்பில்லை.. ஆனால், முந்திக்கொண்டு, எடப்பாடி இப்படி சொல்லிவிட்டது, லேசான கடுப்பை தந்ததாகவே தெரிகிறது.. ஏற்கனவே, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அடுத்தடுத்த அவரது அறிவிப்புகள், செயல்பாடுகள், பாஜகவை சங்கடப்படுத்துவதாகவே உள்ளதாம்.

 சீக்ரெட் ஃபைல்

சீக்ரெட் ஃபைல்

இன்று சென்னை வரும் அமித்ஷாவிடம், ஒரு முக்கிய ஃபைல் ஒன்று பாஜக தரப்பில் இருந்து தரப்பட்டுள்ளதாம்.. அதில், பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த வேலைகள், அவரது அரசியல் கணக்குகள் போன்றவைகள் போன்றவை எல்லாம் ஒரு அறிக்கையாக தயார் செய்து, அமித்ஷாவிடம் தரப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே, எடப்பாடி மீதான நம்பகத்தன்மை மேலிடத்துக்கு குறைந்துள்ள நிலையில், இந்த சீக்ரெட் அறிக்கையானது, மேலும் அதிருப்தியை எடப்பாடி மீது பெற்றுத்தரும் என்கிறார்கள்.. அந்த ஃபைலில் உள்ள விவரங்கள் என்ன? என்று இப்போதுவரை உறுதியாக தெரியவில்லை.

 கவுன்டவுன்

கவுன்டவுன்

ஆனால், அமித்ஷாவை ஓபிஎஸ், சந்திக்க நேரிடும்போது, எடப்பாடி மீதான, புகார்களை, அதிருப்திகளை, தன்தரப்பில் இருந்தும் எடுத்து சொல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.. இதுவும் மேலிடத்தை எந்த அளவுக்கு கடுப்பாக்க போகிறதோ தெரியவில்லை.. எடப்பாடி மீதான நம்பகத்தன்மை பாஜக மேலிடத்துக்கு குறையும் பட்சத்தில், எடப்பாடி இல்லாத கூட்டணிக்கு பாஜக தயாராகும் பட்சத்தில், இதை எப்படி எடப்பாடி எதிர்கொள்ள போகிறார்? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+