கேள்விப்பட்டீங்களா.. ஒரே நாளில் மலைக்க வைத்த டாஸ்மாக் வசூல்.. தீபாவளியை மிஞ்சி.. "தள்ளாடுது" தமிழகம்
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.400 கோடிக்கு டாஸ்மாக்குகளில் மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நாளை நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்படுவாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

விடுமுறை: அந்தவகையில், நேற்று புதன்கிழமை 17ம் தேதி முதல், நாளை வெள்ளிக்கிழமை 19ம் தேதி வரை என தொடா்ந்து 3 நாள்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதைத்தவிர, மஹாவீா் ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 21ம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்: இந்த விடுமுறைகளால் திணறிப்போன குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க துவங்கினார்கள்.. மதுபானக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் மதியம் முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கியது.. சிலர் கார் உட்பட பல்வேறு வாகனங்களை கொண்டுவந்து, அதில் மதுபான பெட்டிகளை வாங்கி கொண்டு போனார்கள்.
நேற்றுமுன்தினம் 16ம் தேதியன்று, ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் டபுள் மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை: இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லும்போது, "நேற்றுமுன்தினம், ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும், ஆனால், நேற்றுமுன்தினம் டபுள் மடங்கு அளவுக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருந்தது" என்றனர்.
ஆச்சரியம்: தேர்தலுக்காக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது.. வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது மதுபான விற்பனை ரூ.100 கோடிகளுக்கு மேல் விற்பனையாகும் நிலையில், இப்போது 400 கோடிக்கு மதுபான விற்பனை நடந்திருப்பது தமிழக மக்களுக்கு வியப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications