Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிஞ்சதாமே" எல்லாம்.. படக்குனு எடப்பாடி போட்ட ஆர்டர்.. அப்ப ஓபிஎஸ் + டிடிவி + பாஜக + சசி அவ்ளோதானா?

அதிமுகவில் அடுத்தக்கட்ட வியூகத்தை எடப்பாடி டீம் கையிலெடுத்துள்ளதால், விறுவிறு பணிகள் ஆரம்பமாகி உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தல் ரிசல்ட் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து, அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம்.. இதைக் கேள்விப்பட்டு, ஓபிஎஸ் தரப்பு கையை பிசைந்து நிற்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. என்னவாம்?

பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது அதிமுக.. உடனே ஓபிஎஸ்ஸும் தேர்தலில் இருந்து விலகி கொண்டார்.. தினகரனும் ஒதுங்கி கொண்டார்.. பாஜகவும் ஆதரவு தந்தது.

இறுதியில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவானது, 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றது... ஆனாலும் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது.

மண் குதிரை

மண் குதிரை

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லி வந்த அதிமுகவுக்கு இந்த தேர்தல் ஒரு சவாலாகவே இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர்., ஆனால், திமுகவின் அதிரடி வியூகத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாமலேயே போய்விட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மொத்தம், 85 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

ஈஸ்ட் ஈரோடு

ஈஸ்ட் ஈரோடு

இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை மேற்கொள்கிறார். எதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்பது குறித்து சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழக்க காரணமாக இருந்த விஷயங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடு பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பேச உள்ளாராம்.. அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளாராம்..

பழைய கார்டு

பழைய கார்டு

அதுமட்டுமல்ல, ஏற்கனவே இந்த தோல்விகள் குறித்தெல்லாம் பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதையெல்லாம் அந்த கூட்டத்திலேயே அம்பலப்படுத்தி, தவறு செய்துள்ள மாஜிக்கள், நிர்வாகிகளை எச்சரிக்கை செய்ய போவதாகவும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்தக்கட்டத்துக்கு அதிமுக நகர்ந்துள்ளதாக தெரிகிறது.. இப்போது அதிமுகவினரிடம் பழைய உறுப்பினர் கார்டு மட்டுமே உள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை.. எனவே, புதிய உறுப்பினர் கார்டும் தயாராகி கொண்டிருக்கிறது.

ஜஸ்ட் 3 + 3

ஜஸ்ட் 3 + 3

அந்த கார்டுகள், அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனை வழங்கப்பட உள்ளது.. 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதுகுறித்து கட்சியின் சீனியர் சொல்லும்போது, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.. புதிய உறுப்பினர் கார்டு அதிமுகவினருக்கு வழங்கப்பட்டதுமே, இந்த பணிகள் படிப்படியாக தொடங்க உள்ளது.. வருகிற 17-ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட உள்ளது" என்றார்.

மணல்கோட்டை

மணல்கோட்டை

கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகி உள்ளதால், அதிமுக கூடாரமே படுபிஸியாக காணப்படுகிறதாம். ஆனால், இதையெல்லாம் பார்த்து ஓபிஎஸ் டீம் கையை பிசைந்து நிற்கிறதாம்.. ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கி இருக்கும் பாஜக தரப்போ குழம்பி உள்ளதாம். "என் உயிரே போனாலும் இலையை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்ற சசிகலாவுக்கும் கலக்கம் சூழ்ந்துள்ளதாம்.. ஏற்கனவே முக்கிய ஆதரவாளர்கள் ஓபிஎஸ், பாஜக தரப்பில் இருந்து விலகி வரும்நிலையில், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையிலும் அவரவர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. அநேகமாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி முடித்ததுமே, அந்த கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு ஓபிஎஸ் தரப்பும், மா.செ. கூட்டத்தை கூட்டலாம்" என்கிறார்கள்... என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!!

மாறுது கோலம்

மாறுது கோலம்

அதுமட்டுமல்ல, பாஜக முக்கிய நிர்வாகிகள் மெல்ல மெல்ல அதிமுக பக்கம் சாய்ந்து வரும்நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்கிறார்கள்.. சமீபகாலமாகவே, பூசல்கள் பாஜகவுக்குள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்தையும் பாஜக மாநில தலைமை சமாளிக்குமா? கட்சிக்குள்ளேயே வலம்வந்து கொண்டிருக்கும் அதிருப்திகளை களைய முன்வருமா? ஒருங்கிணைந்த அதிமுகவுக்குள், எடப்பாடியை கொண்டுவர என்ன செய்ய போகிறது? திமுகவுக்கு எதிரான வலிமைவாய்ந்த கூட்டணியை எப்படி பாஜக பலப்படுத்த போகிறது? என்ற அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன. இதற்கு நடுவில், ஓபிஎஸ் டீமில் உள்ள நிர்வாகிகள், வேறு ஒரு கறார் முடிவை எடுக்க போவதாக சொல்கிறார்கள். அதன்படி, பாஜகவுக்கு ஒரேயடியாக இனி பணிந்து செல்ல போவதில்லையாம், மாறாக தொண்டர்களை சந்திக்க போவதாக சொல்கிறார்கள். அதாவது, பாஜக பக்கம் செல்வதைவிட, மக்கள் மன்றத்திடம் சென்று, தங்களுக்கான பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+