"NO 1".. பாஜக தனித்து போட்டியா.. " நரேந்திரரே".. நெல்லையில் சீறிய "தேவேந்திரர்".. அப்படின்னா எடப்பாடி

அண்ணாமலையின் பேச்சுக்கு நெல்லையில் இருந்து போஸ்டர்கள் மூலம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜகவுக்குள் மோதல்கள் வெடித்து வரும்நிலையில், எம்பி தேர்தலில் 'தனித்து போட்டி' என்ற அண்ணாமலையின் பேச்சு பெரும் அதிர்வலையை கிளப்பி வருகிறது. அத்துடன், தமிழக பாஜகவுக்கு முதல் ஆதரவு குரலும் நெல்லையில் எதிரொலிக்க துவங்கிவிட்டது.

இந்த முறை எம்பி தேர்தலில், தமிழகத்தில் இருந்து, குறைந்தபட்சம் 10 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன்தான் பாஜக முனைப்பு காட்டி வருகிறது..

ஆனால், வழக்கம்போல் அதிமுகவின் தயவு இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற யதார்த்த சிக்கலையும் பாஜக புரிந்து கொள்ளாமல் இல்லை.

 சீனியர்கள் ஷாக்

சீனியர்கள் ஷாக்

அதனால்தான் "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் பாஜக வேண்டுகோள் விடுத்து வருகிறது.. ஆனால், சமீப காலமாகவே அதிமுக - பாஜக இடையே பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. பாஜவில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் அதிமுகவிற்கு தாவிய நிலையில், அதிருப்தி அடைந்த பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த முறை பாஜக தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.. இந்த பேச்சினை கேட்டு தமிழக பாஜகவின் சீனியர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. அண்ணாமலையின் பேச்சுக்கு பாஜக தலைவர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.. ஆதரவும் தரவில்லை..

நரேந்திரரே

நரேந்திரரே

காரணம், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்வது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.. அதனால்தான், பாஜக தனித்துப் போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என்று கட்சியின் பிற மாநில நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.. அத்துடன், அண்ணாமலை பேசியிருந்த பேச்சுக்கள் அத்தனையும் டெல்லிக்கு பாஸ் செய்யப்பட்டதாம்.. எனினும், இப்படி பொதுவெளியில் அண்ணாமலை கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்றால், அது மேலிட பாஜகவுக்கு தெரியாமல் இருக்காது.. எடப்பாடி மீதான காட்டத்தை வெளிப்படுத்தவே, மேலிட பாஜக உத்தரவின்படி, அல்லது தனக்கு தரப்பட்ட அசைன்மென்படியே அண்ணாமலை இவ்வாறு ஆவேசமாக பேசியிருக்க முடியும், அதனால்தான், அண்ணாமலை மீது ரிப்போர்ட் சென்றும்கூட, அண்ணாமலையை மேலிட பாஜக கடிந்து கொள்ளவில்லை என்று கருத்து கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 40 லோட்டஸ்கள்

40 லோட்டஸ்கள்

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அண்ணாமலையின் "பாஜக தனித்து போட்டி" என்ற பேச்சுக்கு முதல் ஆதரவு நெல்லையில் போஸ்டர் அடித்து ஒட்டி, அதன்மூலம் பறைசாற்றப்பட்டு வருகிறது.. நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாளை என பல்வேறு இடங்களில், மக்களவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "எங்கள் நரேந்திரரே தனித்து வா, தாமரையை 40 இடங்களிலும் மலரச் செய்வோம்" என்ற வாசகங்களோடு தேவேந்திர குல வேளாளர் சங்க போஸ்டர்கள் மாநகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

நரேந்திரர்

நரேந்திரர்

அண்ணாமலையின் கருத்தை ஆதரிப்பது போல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பாஜக, அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. சில வருடங்களுக்குமுன்பு, பிரதமர் மோடி இங்கே வந்திருந்தபோது, "2015ம் ஆண்டு டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் சந்திப்பு நடத்தினேன். அப்போது தேவேந்திர என்பதும், நரேந்திர என்கிற என்னுடைய பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் கிடையாது, அது நீதியானது. தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது" என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவர்களின் கவனத்தை தற்போது வரை இழுத்து பிடித்து வைத்து வருகிறது..

 தேவேந்திரர்

தேவேந்திரர்

அத்துடன் தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதியிலும் இந்த சமூகத்தை சேர்ந்த பலர் பாஜகவை நோக்கி செல்லவும் வழிவகுத்ததாக கூறப்பட்டது.. ஏற்கனவே, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக ஆகிய கட்சிகள், இந்த சமூக வாக்குகளை அதிகமாக பங்கிட்டு வந்த நிலையில் பாஜகவும் அதில் இணைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளதால், தற்போது அடுத்த கட்ட முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது.. எனவே, வரப்போகும் எம்பி தேர்தலில் தேவர் சமுதாய மக்கள் மட்டுமல்லாமல், நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அடர்த்தியாக இருக்கும் விருதுநகர், தென்காசி, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக ஒரு கணக்கை தமிழக பாஜக போட்டு வருகிறதாம்.

 டமார் விரிசல்

டமார் விரிசல்

அதாவது, எங்கெல்லாம் எடப்பாடியின் செல்வாக்கு வீக் ஆகி வருகிறதோ, அங்கெல்லாம் பாஜக தன் செல்வாக்கை நிலைநாட்டி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. அந்த லிஸ்ட்டில்தான், நெல்லையில் இப்போது முதல் ஆதரவு குரல் கேட்க துவங்கி உள்ளது.. அத்துடன், அண்ணாமலையின் பேச்சுக்கும் வலிய ஆதரவு கிடைக்க துவங்கி உள்ளது.. அப்படியானால் அதிமுக - பாஜக கூட்டணி விரிசல் மேலும் அதிகமாகிறதா? அல்லது "எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் இதெல்லாம்" என்று அதிமுக மூத்த தலைவர் கேசி பழனிசாமி தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பது உண்மைதானா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+