26 + 13.. சுக்கு சுக்கா போகுதே.. "அவர்" இங்கேயே கிளம்பி வர்றாராமே.. ஸ்பீடில் பாஜக.. கவனிக்கும் திமுக
ஜேபி நட்டா தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வர உள்ளதால் பாஜக தெம்புடன் உள்ளது
சென்னை: தமிழக பாஜக குஷியிலும், பெருத்த நம்பிக்கையிலும் உள்ளது.. 10 தொகுதிகள் டார்கெட் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 2 தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன..!!
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக கையில் எடுத்துவிட்டது.. ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்து கொண்டே மறுபக்கம், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை மும்முரப்படுத்தி உள்ளது பாஜக.
தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்று அமித்ஷா அறுதியிட்டு சொன்னபோதே, ஆபரேஷன் சவுத் என்ற பிளான் கையில் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

குறி 10
தமிழக பாஜக, 10 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ள நிலையில், அதில் 5 தொகுதிகளில் தீவிர கவனத்தை செலுத்தி வருவதாக தெரிகிறது.. அந்த 5 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் ஏற்கனவே வலிமையாக உள்ளன.. எனினும், தங்களுக்கான செல்வாக்கை அங்கு மேலும் அதிகரித்து, அந்த தொகுதியை தங்கள் பக்கம் கொண்டுவரும் வியூகத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. கன்னியாகுமரி, தென்சென்னை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம் போன்றவைதான் அந்த மேஜர் தொகுதிகள் ஆகும்.. பூத் கமிட்டி வேலை உட்பட பல்வேறு ஜரூர் மூவ்கள் பாஜகவில் நடந்து வருவதாக தெரிகிறது.

தெம்பு உற்சாகம்
தேசிய பாஜக தலைவர் கோவை வருவதால் கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இதில் நட்டா வருகை மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பாளர்களாக சிபி ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளராக மாநில பொது செயலாளர் முருகானந்தம் மற்றும் பொறுப்பாளர்களாக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கனக சபாபதி, எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2 நாள் தமிழகத்தில் நட்டா தங்கி, கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், நட்டாவின் வருகை, கொங்கு பாஜகவுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது..

ஓபன் மூவ்
கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது. நீலகிரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும், பாஜக போட்டியிட்ட தொகுதி.. 2019 எம்பி தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் நீலகிரியை பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற செய்திகளும் வந்தன.. இந்த முறை பாஜக நீலகிரியை குறி வைத்துவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.. தொகுதியில் ஓபனாகவே இறங்கி தேர்தல் வேலையையும் பார்க்க துவங்கிவிட்டதாக சொல்லும் நிலையில், நட்டாவின் வருகை மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது..!

26 சீட்டுக்கள்
அதிமுக விவகாரம் முடிவுக்கு வராவிட்டாலும்கூட, கூட்டணி குறித்த பேச்சுக்கள் மெல்ல களத்தில் எழுந்து வருகின்றன.. அதிமுக - பாஜக தரப்பிடையே, ஓரளவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக சில தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன.. அதாவது, 13 சீட்கள் பாஜகவுக்கும், 26 சீட்டுகள் அதிமுகவுக்கும் என முடிவானதாம்.. இதில், 13 சீட்களை, கூட்டணிக்கு கொண்டு வரக்கூடிய கட்சிகளுடன் பாஜக பகிர்ந்து கொள்ள வேண்டும், அதேபோல, கூட்டணிக்குள் கொண்டுவர கட்சிகளுடன் அந்த 26 சீட்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கூட்டணியின் தற்சமய நிலைப்பாடாக உள்ளதாக கூறப்பட்டன.. ஆனால், அதற்கு பிறகு இதை பற்றி எந்த உறுதியான செய்திகளுமே வரவில்லை.

வளையங்கள்
அந்தவகையில் மீண்டும் ஒரு தகவல் இணையத்தில் சுற்றி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவரின் முக்கிய ஆதரவாளர்களான 2 முன்னாள் அமைச்சர்களிடம் பாஜகவின் 2ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாக தெரிகிறது. இதில் 2 ஆப்ஷன்களை தந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்... ஓபிஎஸ்ஸுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இருந்தால் பாஜகவுக்கு 10 தொகுதிகளே போதும், மிச்சமுள்ள தொகுதிகளில் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும் போட்டியிடலாம் என்பது முதல் ஆப்ஷன்.. அப்படி இல்லாவிட்டால், அதிமுகவுக்கு 15 தொகுதிகள் கொடுக்கப்படும். அதில் எடப்பாடி பழனிச்சாமி டீம் போட்டியிடலாம்..

2வது ஆப்ஷன்
மற்ற 25 தொகுதிகளில் ஓபிஎஸ் அணிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படும், ஆனால், அவரது டீம் தாமரை சின்னத்தில் போட்டியிடும்.. மற்றவைகளில் பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதிலும் மிச்சம் உள்ள தொகுதிகளில்தான் பாஜக போட்டியிடும் என்பதே 2வது ஆப்ஷன்.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருந்தாலும், நித்தம் ஒரு அனுமானங்களும், யூகங்களும் கிளம்பியபடியே உள்ளன.. எனினும், நட்டாவின் தமிழகம் வருகையில், இதுகுறித்தும் ஒருசில ஆலோசனைகள் பேசப்படலாம் என்கிறார்கள்.. பார்ப்போம்..!!!

பாதிக்கு பாதி
இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நீலகிரி மற்றும் கோவை தொகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தவே முதலில் பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு, ஜேபி நட்டா நேரடியாகவே செல்ல திட்டமிட்டுள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்வார்கள் என்று கூறப்படுகிறது... நட்டா வந்து சென்ற நிலையில், மீண்டும் தேசிய தலைவர்கள் அடுத்தக்கட்டமாக தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வரும்போது, ராமேஸ்வரம், பரமக்குடி போன்ற இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications