Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதாரண வெள்ளை அரிசி, நாட்டு சர்க்கரைக்கு கிடைத்த உலக பெருமை.. GI Tag வாங்கிய தூயமல்லி, கவுந்தம்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக பேமஸ் ஆகிறது தமிழகத்தின் தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை.. ஆம், இந்த இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடை, வேளாண் வணிக வாரியம் பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், தனித்துவங்கள் என்னென்ன தெரியும்? மேற்கண்ட இரு பொருட்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

புவிசார் குறியீடு என்பது , ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்குகிறது..

Thooyamalli Rice Goundampadi Nattu Sakkarai GI Tag

உலகின் வெவ்வேறு பகுதிகளில், பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட இடத்தில் அல்லது பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவை உற்பத்தியாகும் இடத்தின் காரணமாக, சுவை, தரம் போன்ற சிறப்பு குணங்களுடன் தனித்துவமானதாக திகழ்கிறது.

ஆவணங்கள் - மத்திய அரசு

குறிப்பிட்ட ஊர்களில் தயாரிப்பதால் மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைத்துவிடாது.. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்கள் ஆவணங்களாக சேகரிக்கப்படும்..

இந்த ஆவணங்களுடன் சேர்த்து மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உடனே மத்திய அரசும், அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்கும். அந்தவகையில், தமிழகத்துக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன..

புவிசார் குறியீடு

இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது.. அத்துடன், புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். இதனால் புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை. மேலும், அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாகவும் இது கருதப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல், 41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சிகளை, வேளாண்துறையின் கீழ் இயங்கும் வேளாண் விற்பனை வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், தூயமல்லி அரிசி, கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தூயமல்லி அரிசி

தூயமல்லி அரிசி என்பது நம்முடைய பாரம்பரிய, வெள்ளை நிறத்தில் உள்ள, மெல்லிய தானிய அரிசி வகையாகும். இது பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது சத்தான அரிசி.. இந்த அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் A., B போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

இது நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது.. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது... செரிமான கோளாறுகளைக் குறைக்கிறது. சரும சுருக்கத்தைக் குறைத்து இளமையான தோற்றத்தைத் தர உதவுகிறது.. பழங்கால மன்னர்களால் விரும்பி உண்ணப்பட்ட இந்த அரிசி, பல்வேறு பாரம்பரிய உணவுகளான பிரியாணி, கொழுக்கட்டை, பொங்கல், இட்லி, தோசை போன்றவை தயாரிக்க ஏற்றது.

சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இந்த அரிசி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளதால், நம் மாநிலத்துக்கே உரித்தான அரிசி வகையாக இது கருதப்படுகிறது.

கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை

அதேபோல கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை என்பது, ஈரோடு மாவட்டத்திற்கு அருகிலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கரும்புச் சாகுபடி செய்யப்பட்டு, இயற்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்துத் தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரையாகும்.

ரசாயன கலப்படமில்லாமலும், நஞ்சு இல்லாத முறையிலும் தயாரிக்கப்படுகிறது. வயல்வெளிகளில் ஆலை அமைத்து, பாரம்பரிய முறைப்படி கரும்பில் இருந்து சாறு பிழிந்து, காய்ச்சி இந்த சர்க்கரை தயாரிக்கப்படுவதால், இதற்கு இத்தனை மவுசு.

கவுந்தப்பாடியில் இந்த நாட்டுச் சர்க்கரைக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஸ்பெஷலாக செயல்படுகிறது.. அங்கு விவசாயிகள் தங்கள் நாட்டு சர்க்கரையை மூட்டைகளில் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

உலக அங்கீகாரம்

சுருக்கமாக சொல்லப்போனால் 100% இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.. இதில் இரும்புசத்து நிறைய உள்ளது.. இதனால் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது, இன்சுலின் ஸ்பைக் அதிகமாக ஏற்படுத்தாது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.. ரசாயன பாதிப்பும் இல்லை..

இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளதால்தான் தூயமல்லி அரிசி, கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது... இதனால் புவிசார் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் எளிதாக்கப்படுவதுடன், அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+