ஹைலெவல்.. 19 நகராட்சிகளின் தரம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன சுகாதார அலுவலர் சங்கம்
சென்னை: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நடந்துவருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.

அந்தவகையில், நேற்று முன்தினம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைல் மானியக் கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக அமைச்சர் நேரு பேசும்போது, தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்தவண்ணம் உள்ளன. இந்த நகராட்சிகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இதே போல, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். ஊராட்சி உள்ளாட்சிகள் அமைப்பு பதவி டிசம்பர் 2024 நிறைவடைவதால் அதற்கு பிறகு, எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என ஊரக வளர்ச்சித்துறை, அமைச்சர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும்.
3 மாநகராட்சி , 9 நகராட்சிகளில் ரூ.174 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.சீர்காழி உள்பட மேலும் 12 நகராட்சிகளில் ரூ. 42.80 கோடியில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் .தமிழ்நாட்டில் 19 நகராட்சி , 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று அமைச்சர் நேரு அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்புக்குதான், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி துறைக்கு நன்மைகள் பல கிடைக்கும். நிறைய சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர் பணியிடங்கள் மற்றும் இதர பிற பிரிவுகளான பொது பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவுகளிலும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கூடுதலாக பணியிடங்கள் தோற்றுவிப்பதனால் வேலைகள் எளிதாகும். மக்களுக்கான சேவையில் தாமதம், தொய்வு ஏற்படாது. பதவி உயர்விற்காக வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் எளிதில் சென்றடையும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்புகள் சட்டம் 1998யை நடைமுறைபடுத்த உரிய விதிகள் விரைவில் தோற்றுவிக்கப்படும் என நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
எனவே, நகராட்சிகளின் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், உயர் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறது என்று மாநிலதலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications