மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டி வெற்றியில் தாயை இழந்தார்.. பிக்பாஸுக்கு பிறகு தந்தை.. சோகத்தில் பாலாஜி!
சென்னை: கடந்த 2018இல் மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போது தாயை பறிகொடுத்த பாலாஜி முருகதாஸ், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆன சில நாட்களில் தந்தையையும் பறிகொடுத்த சோகம் எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து ஏட்டி போட்டியாகவே நடந்து கொண்டவர் பாலாஜி. தனது தாய், தந்தை இருவரும் குடித்துவிட்டு தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்துவார்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கில் கூறி கண்கலங்கினார்.
அது முதல் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தன. இந்த நிலையில் இந்த நிலையில் தனது முன் கோபத்தால் அவ்வப்போது ஆரியிடம் முறைத்துக் கொண்டு மக்களின் ஆதரவை இழந்தார். இதனால் அவர் அந்த போட்டியின் ரன்னரானார்.

அதிர்ச்சி
இந்த நிலையில் தற்போது இவரது தந்தை திடீரென உயிரிழந்துவிட்டார். இதையறிந்த பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து பாலாஜிக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 4 போட்டியின் வின்னரான ஆரி அர்ஜுனன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வலிமை
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பாலாஜி முருகதாஸின் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். இந்த கஷ்டமான காலத்தில் அவரது குடும்பத்திற்கு வலிமையும் மன தைரியத்தையும் அந்த இறைவன் கொடுக்க வேண்டும் என ஆரி தெரிவித்துள்ளார்.

தாயை இழந்தார்
கடந்த 2018-ஆம் ஆண்டு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா என்ற போட்டியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் அதில் வெற்றியும் பெற்றார். இந்த வெற்றிக்கு பின்னர் சிறிது காலத்தில் தாயை இழந்துவிட்டார். அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் பாலாஜி.

இறந்த சோகம்
ஆனால் அவரது செயல்பாடுகளால் விரைவில் எலிமினேட் செய்யுமாறு பொதுமக்கள் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் கோரிக்கைகளை அனுப்பினர். எனினும் அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும் நிலையில் தந்தை இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications