பிக்பாஸ் நிகழ்ச்சி காஸ்ட்லியான புரணி பேசும் நிகழ்ச்சி.. சீமான் கடும் விமர்சனம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு காஸ்ட்லி புரணி பேசும் நிகழ்ச்சி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு விட்டது. தற்போது 4ஆவது சீசன் எப்போது நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் 4ஆவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி
இந்த சீசனில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள், நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். அதற்குள்ளாகவே பிக்பாஸில் இந்த போட்டியாளர்கள் வருவார்கள் என யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. கொரோனா நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

கமல்
இதனால் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போதும் வாராவாரம் கமல் பங்கேற்பின்போதும் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

புரணி பேசுவது
அப்போது அவரிடம் பிக்பாஸ் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், புரணி பேசுவதை அதிக மக்கள் விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். புரணி பேசுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ஆகும். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு காஸ்ட்லி புரணி பேசும் நிகழ்ச்சி என சீமான் விமர்சித்திருந்தார்.

டிஆர்பி
பிக்பாஸ் நிகழ்ச்சியை சீமான் விமர்சிப்பது இது முதல்முறையல்ல. இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். கடந்த சீசனில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக ரூல்ஸ்களை மீறி எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications