ஹரிபத்மன் மிகவும் நல்லவர்.. "அந்த" 2 பேராசிரியைகள்தான் இத்தனைக்கும் காரணம்.. நடிகை அபிராமி பரபரப்பு
சென்னை: இரு பெண் பேராசிரியைகள் கலாஷேத்ரா மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார்கள் என பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா நடன கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ள ஹரி பத்மன் உள்பட 4 பேர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதற்கு நியாயம் கேட்டு சில நாட்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் ஏப்ரல் 6ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் ஹரிபத்மன் மீது காவல் துறையும் கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு செல்ல மாட்டோம் என மாணவிகள் தெரிவித்திருந்தனர். மகளிர் ஆணைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை புகாராக கூறியுள்ளனர்.

பாலியர் புகாருக்குள்ளான ஹரி பத்மன், சென்னை மாதவரத்தில் உள்ள தோழி வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். இதனால் கலாஷேத்ராவில் வரும் செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மாணவிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி கல்லூரிக்கு திரும்புமாறு கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதை ஏற்க மறுத்தனர் மாணவிகள்.
மேலும் உதவி பேராசிரியர்கள் 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன் உள்பட 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என வாய்மொழி உத்தரவு கொடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த மாணவிகள் எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கல்லூரிக்குள் வருவோம் என்றனர்.
இதையடுத்து கல்லூரி ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேரை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஆரம்பத்திலிருந்தே நடிகை அபிராமி மறுத்து வருகிறார். அவர் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. ஹரி பத்மனை வீழ்த்த இது போல் பொய் புகார் கூறுவதாக அபிராமி சென்னை கமிஷனர் ஆணையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் இந்த போராட்டத்திற்கு காரணம் இரு பெண் பேராசிரியைகள் என பெயருடன் குறிப்பிட்டுள்ளார்.
புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அபிராமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கலாஷேத்ராவுக்கு எதிராக என்னை பேச வைக்க முயற்சி நடந்தது. கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடக்கிறது. ஹரி பத்மன் எங்களுக்கு பாடம் நடத்திய போது எந்த பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை. நிர்மலா, நந்தினி ஆகிய 2 பேராசிரியைகள்தான் மாணவிகளை தூண்டி விட்டு போராட்டம் நடத்துமாறு கூறுகிறார்கள். இவ்வளவு நாளாக ஏன் பாலியல் புகாரை மாணவிகள் கொடுக்கவில்லை.ஹரிபத்மன் முதுகலை பிரிவுக்கு மட்டுமே பாடம் எடுத்து வருகிறார். அப்படியிருக்கும் போது புகார் சொன்ன முன்னாள் இளநிலை மாணவிக்கு எப்படி அவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும்?
மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன், ஹரி பத்மனை பாராட்டினார். இது அந்த இரு பேராசிரியைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார்கள். 2010 - 2015 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ராவில் படித்துள்ளேன். எனக்கு கூட சிலர் போன் செய்து என்னையும் கலாஷேத்ராவுக்கு எதிராக பேச சொல்கிறார்கள். இவ்வாறு நடிகை அபிராமி கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications