"குலுங்குது" திமுக.. அள்ளுது சான்ஸை.. புள்ளிய அலேக்கா தூக்கி.. பாஜக காரணமா.. எடப்பாடியே எதிர்பார்க்கல
லியாகத் அலிகான் ஓபிஎஸ் டீமில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது
சென்னை: இரட்டை இலையை எடப்பாடி டீம் கைப்பற்றியுள்ள நிலையில், ஓபிஎஸ் டீம் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு, புதிய வியூகங்களை திட்டமிட்டு வருகிறது.. அதேசமயம், இந்த அதிமுக களேபரத்தில் திமுக குஷியாகி உள்ளது.
நடக்க போகும் இடைத்தேர்தலில், தன்னுடைய வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் வாங்கியாக வேண்டும் என்பது ஏற்கனவே அனைவரும் யூகித்த ஒன்றுதான்..
காரணம், அதிமுக நான்தான் என்று சொல்லும் ஒருவர், இரட்டை இலையை எதிர்த்து நிச்சயம் நிற்க முடியாது.. மேலும், பொதுக்குழுவில் ஆதரவும் பெரிதாக இல்லை..

ஓவர் அப்செட்
வேண்டுமானால், வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொண்டு, இனி அடுத்தடுத்த சட்டரீதியான விஷயங்களை இனி தொடர நினைக்கலாம் என்றார்கள்.. எதிர்பார்த்தபடியே, ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்.. இரட்டை இலை எடப்பாடி தரப்புக்கு சென்றுள்ளது.. இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருவதாக தெரிகிறது.

ஆஃப் செய்த எடப்பாடி
இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட எல்லா வியூகங்களும், ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்த எடுத்து கொண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது.. ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்வதற்காக மட்டும்தான்.. "கூட்டணி" என்று பெயரை பேனரில் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்காள்வதற்காகத்தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்போது இரட்டை இலையை தாங்கள் பெற்றுவிடவும், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எடப்பாடி டீம் ஆரம்பித்துவிட்டது.. அதுமட்டுமல்ல, சட்டரீதியான விஷயங்களில் ஓபிஎஸ் வலுவாக இருந்தாலும், களத்தில் கோட்டை விட்டுவிட்டார், எனவே, ஓபிஎஸ் டீமில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவவும் கூடும் என்றும் யூகங்கள் கிளம்பின.

லியாகத் அலிகான்
அதை நிரூபிக்கும் வகையில், ஒருவர் இப்போதே, ஓபிஎஸ் டீமில் இருந்து விலகிவிட்டார்... அணி மாறுவார் என்று பார்த்தால், அவர் கட்சியே மாறி உள்ளார்.. தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், ஓபிஎஸ் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.. ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு தன்னுடைய ஆதரவு தெரிவித்தார். இதை பற்றி லியாகத் அலிகான் சொல்லும்போது, நான் 2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன்.

சித்து விளையாட்டு
அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன். சமீபகாலமாக பாஜவின் சித்து விளையாட்டுகளில் ஓபிஎஸ் சிக்கி கட்சியை அடமானம் வைத்துவிட்டார். பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டதோடு, இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்... ஒவ்வொரு நாளும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வரும் ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகியதோடு நான் நடத்தி வரும் எம்ஜிஆர் இயக்கம் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது.

கூடாரம் காலி
திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி வழங்கினால் கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.. இதேபோல பாஜக மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது... கட்சியில் இருந்து விலகியதுடன், தேர்தலில் பிரச்சாரத்துக்கும் வரப்போவதாக சொல்லிஉள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும், ஆலோசனையிலும் ஓபிஎஸ் டீம் தீவிரமாக இறங்கிவரும் நிலையில், அங்குள்ள அதிருப்தியாளர்கள் சிலர், எடப்பாடி பக்கம் அல்லது திமுக பக்கம் தாவக்கூடும் என்ற தகவல்களும் கசிந்து வருவதால், ஓபிஎஸ் கூடாரமே கதிகலங்கி உள்ளதாம்..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications