Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழ்நாட்டிலும் உள் நுழைவுச் சீட்டு வேண்டும்”.. பீகார் குடும்பம் கொலையால் கொந்தளித்த வேல்முருகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பீகார் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன், "இது ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல. இது ஒரு விபத்து அல்ல. இது பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியத்தின் விளைவு. வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல தமிழ்நாட்டிலும் உள் நுழைவு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வந்த இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி, அவர்களது குழந்தை என குடும்பமே கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் நண்பர்கள் உட்பட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 வயது ஆண் குழந்தையின் சடலம் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது முனிதா குமாரியின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Bihar Family Murder in Chennai TVK Leader Velmurugan Calls for Inner Line Permit in Tamil Nadu

இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல தமிழ்நாட்டிலும் உள் நுழைவு சீட்டு (Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலை தேடி... வாழ்வாதாரம் தேடி... தமிழ்நாட்டை வந்தடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் சென்னைத் தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாகப் பணியில் சேர்ந்து, அதே கல்லூரி வளாகத்திலேயே குடும்பத்துடன் தங்கி வாழ்ந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து மனைவியை காக்க முயன்ற ஒரே காரணத்திற்காக, கொடூரமாக தாக்கப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் அந்த இளைஞர்.
அதோடு, அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளார். உச்சகட்டக் கொடூரமாக, தாய், தந்தை இருவரையும் இழந்து அழுதுகொண்டிருந்த இரண்டு வயது பச்சிளம் குழந்தையும் கூட, இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளது.

மூன்று உயிர்கள்... ஒரு குடும்பம்... ஒரே இரவில் பூண்டோடு அழிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி, அடையாறு , இந்திரா நகர் ஆற்றங்கரை ஓரத்திலும், குழந்தையின் உடலை வேறு இடத்திலும் வீசிக் குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இளைஞர் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தாயின் உடல் தேடப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல. இது ஒரு விபத்து அல்ல. இது பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியத்தின் விளைவு. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஏற்கனவே தமிழ்நாடு அரசின் முன் வைத்து, தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் பின்வரும் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று இந்த மூன்று உயிர்கள் உயிரோடு இருந்திருக்க முடியும்.

வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல தமிழ்நாட்டிலும் உள் நுழைவு சீட்டு (Inner Line Permit) முறை. ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் வடமாநிலத்தவர்கள் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் வெளியேறுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் கடுமையான கண்காணிப்பு அமைப்பு. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் வளாகத்திலேயே பாதுகாப்பான குடியிருப்பு வசதி வழங்க ஒப்பந்ததாரர்களை கட்டாயப்படுத்துதல்.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் 90% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கே. தமிழ்நாடு அரசுத் துறைகளில் 100% "தமிழக வேலை தமிழருக்கே" என்பதைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துதல். 2014 க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய எந்தவொரு வடமாநிலத்தவருக்கும், வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புதல்.

அது மட்டுமல்ல. இந்தியப் பெருநிலம் என்பது ஒரே மொழி, ஒரே இன, ஒரே பண்பாட்டால் உருவானதல்ல. பல மொழிவழி தேசிய இனங்கள், பல பண்பாட்டு அடையாளங்கள், பல சமூகங்கள் இணைந்த ஒன்றே இந்தியா. அந்தந்த மொழிவழி தேசிய இனங்களின் சொந்த நிலப்பரப்புகளிலேயே, அவர்களுக்குரிய தரமான கல்வி, நியாயமான வேலைவாய்ப்பு, உற்பத்தி வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தால், இன்று பிற மொழி வழி தேசிய இனத்தை சேர்ந்த இளைஞர்கள், குடும்பங்கள், பச்சிளம் குழந்தைகள், தத்தமது இரத்தச் சொந்தங்களை, நிலங்களை, வீடுகளை விட்டு, வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

பஞ்சம் பிழைக்கப் பாதுகாப்பற்ற வாழ்வைத் தேடி, அந்நிய நிலங்களில் அடையாளமற்ற உயிர்களாக வாழ வேண்டிய நிலையும் உருவாகியிருக்காது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு, சில தனி நபர்கள் மட்டும் காரணம் அல்ல. தேசிய இனங்களின் உரிமைகளைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு திணிக்கும் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சிக் கொள்கைகள் என்ற பெயரில் வீழ்ச்சிக் கொள்கைகள் ஏற்படுத்தும் மனித விரோத விளைவுகளே இவை.

ஒருபுறம், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூக சமநிலையும் சீரழிக்கப்படுகிறது. மற்றொரு புறம், வட மாநிலங்களின் இளைஞர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல், உயிர் பாதுகாப்பற்ற சூழலில் கட்டாயமாக இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். இந்த இரட்டை அநீதியையும் முடிவுக்கு கொண்டு வர, மாநில உரிமைகளையும், தேசிய இனங்களின் உயிர் உரிமைகளையும், ஒரே நேரத்தில் பாதுகாக்கும் அரசியல் தீர்வே அவசியம். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள தேசிய இனங்கள் முடிவு செய்வதே சரியான தீர்வைத் தர முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+