ஒரே ஆரவாரம்.. தமிழகம் முழுவதும் பாஜக இன்று தேசிய கொடியுடன் பைக் பேரணி.. போராடி பெற்ற அனுமதியால் குஷி
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் பைக் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், பேரணியை நடத்துகிறது பாஜக.
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. எனவே, சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்தவும் பாஜக முடிவு செய்திருந்தது.

பைக் பேரணி: எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்... இந்த பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனுமதி மறுப்பு: இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, "நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனபிறகும் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி பேரணி செல்வதை தடை செய்ய கூடாது என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
ஆனால், பேரணியில் தேசியகொடியை மரியாதையுடன் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்பவர்கள் தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபட கூடாது, பேரணி ஏற்பாட்டாளர்கள் தங்கள் பேரணி வழித்தடங்கள் குறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தயார் பாஜக: சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏந்தி பைக் பேரணி செல்ல, பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை தந்தது.. இதையடுத்து, இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, பைக் பேரணிக்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் தமிழக பாஜகவினர்... இன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த பேரணி நடைபெற உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது..!!
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications