சென்னை பஸ் ஸ்டாப்களில் 'சனாதனத்தின் அருமை' என கும்பமேளா விளம்பரம்!
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னையிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரங்கள்தான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளன.
சென்னையின் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில், "சனாதனத்தின் அருமை, மஹாகும்ப் விழாவின் பெருமை. மனித சமுதாயத்தின் அற்புதமான கலாச்சாரத்தை பறை சாற்றுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மகா கும்பமோள நிகழ்வுக்கான விளம்பரங்களை நாடு முழுவதும் உத்தரப் பிரதேச மாநில அரசு கொண்டு சேர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக களமாடி வரும் நிலையில், சனாதனத்தை ஆதரிக்கும் வகையில் உள்ள விளம்பரங்களுக்கு எப்படி மாநகராட்சி அனுமதி வழங்கியது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
பேருந்து நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளில், விளம்பரம் செய்ய வேண்டும் எனில், அதற்கு மாநகராட்சியின் அனுமதி தேவை. ஆக இந்த அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உதயநிதியும் சனாதனமும்:
கடந்த 2023ம் ஆண்டு, 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின்' சார்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த அப்போதைய அமைச்சரும், இப்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்பது டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவை போல் ஒழிக்கப்பட வேண்டியது" என்று பேசியிருந்தார்.
அவர் பேசியதுதான் தாமதம், உடனே நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்து எதிர்ப்புகள் எழ தொடங்கின. உதயநிதியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என்று கூட அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் துறவி பரமஹம்ஸ் ஆச்சாரியா அறிவித்திருந்தார். வட மாநிலங்களின் பல இடங்களில் உதயநிதியின் உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
தமிழ்நாடும் சனாதனமும்:
உதயநிதியின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டுமன்று. அது தமிழ்நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பு என்றே பலரும் கூறினர். கடவுள் பெயரில் நடைபெறும் அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும், சுரண்டல்களுக்கும் தமிழ்நாடு என்றும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துதான் வந்திருக்கிறது. கடவுள் இல்லை, என்று கூறிய பெரியாரின் சிலை இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
விளம்பரமும் சர்ச்சையும்:
தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும் கூட கடவுள் மறுப்பு கொள்கையை பிரதிபலித்த திராவிட இயக்கத்திலிருந்து உருவானதுதானே! ஆனால் திமுக தனது கொள்கையிலிருந்து தடம்புரள்வதாக அக்கட்சியனரே விமர்சித்து வருகிறார்கள்.
இந்த விமர்சனத்திற்கு சமீபத்திய காரணம் சென்னை பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகள்தான். சனாதனத்திற்கு ஆதரவாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மூலம் திமுக என்ன சொல்ல வருகிறது? இதற்கான அனுமதியை கொடுத்தது யார்?
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை இயற்ற கேட்டால் அமைதி காப்பது, மகாவிஷ்ணு பஞ்சாயத்துக்கு கல்வித்துறை அதிகாரிகளை பலிகடாவாக்கியது போல் அல்லாமல், இந்த விஷயத்தின் மூலமாகவாவது திமுக, சனாதன விஷயத்தில் விழித்துக்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். திமுகவின் தனித்தன்மையை மேலும் இழக்காத வண்ணம், இனியும் அரசு செயல்படுமா? என்பதே திமுகவினரின் கேள்வியாக இருக்கிறது.
'சனாதனத்தை வேரறுத்து சமத்துவம் காக்கும் திராவிட மாடல் அரசு' என ஹிந்தியில் எழுதி உத்திரப் பிரதேசத்தில் விளம்பரம் கொடுக்க முடியுமா தமிழ்நாடு அரசால்? எவரை மகிழ்விக்க இந்த முயற்சி? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications