ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்.. 10 காசு செலவில்லை.. 2018ஐ விடுங்க.. தமிழக அரசு அதிரடி பாருங்க
சென்னை: கடந்த 2018க்கு முந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுத்து வரும்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆதார் கார்டை போலவே, ரேஷன் கார்டை போலவே, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமாகும்.

சான்றிதழ்கள்: இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்.. அதேபோல், ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும்.
பிறப்பு சான்றிதழ்: அரசின் சலுகை, கல்வி, வேலை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம். அதேபோல் ஒரு மனிதரின இறப்பு சான்றிதழ் இருந்தால் அந்த நபரின் சொத்துக்கள், வங்கி பணம் உள்ளிட்டவற்றை வாரிசுகள் பெற முடியும். அதனால் ஒவ்வொருவரின் பிறப்பு மற்றும் இறப்பும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சென்னை மாநகராட்சியில், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில், சென்னையில் பிறந்தவர்கள், இறந்தவர்கள் குறித்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, எப்போது வேண்டும் என்றாலும், பொதுமக்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுகாதாரத்துறை: அதேநேரம், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பதிவாகும், பிறப்பு, இறப்பு தொடர்பான சான்றிதழ்கள், மக்களுக்கு எளிதில் கிடைக்காமல் இருந்தது. அதனால், சென்னையை தவிர்த்து, தமிழகம் முழுவதும் பதிவாகும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், https://www.crstn.org என்ற இணையதளத்தில் கிடைக்கும் வகையில், பொது சுகாதாரத்துறையின் பிறப்பு, இறப்பு பதிவாளர் துறை ஏற்படுத்தியது.
2018 ஜனவரி 1ம் தேதி முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் crstn.org என்ற இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்தவகையில், 2018க்கு பிறகு, மொத்தம் 37 லட்சம் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.. ஆனால், 2018க்கு முந்தைய சான்றிதழ்கள் இன்னமும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.. இதற்கான வசதியையும் ஏற்படுத்த தமிழக அரசு முயன்று வருவதாக தெரிகிறது.
நம்பிக்கை: இதுகுறித்து, பிறப்பு, இறப்பு சான்று துறை அதிகாரிகள் சொல்லும்சூபாது, "சென்னை மாநகராட்சியில் அனைத்து வருட, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேநேரம், மற்ற மாவட்டங்களில், இதுபோன்று வசதியில்லை. கல்வி சான்றிதழ், வாக்காளர் அட்டையில் உள்ள பிறப்பு தேதிகளை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
அந்த சான்றிதழ்கள் இல்லாதவர்கள், அந்தந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளரிடம் விண்ணப்பித்து பெறும் நிலையே இன்னமும் உள்ளது. இதனை தவிர்க்க, 1990ம் ஆண்டுக்கு பிந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கினால் விரைந்து சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications