பிறப்பு சான்றிதழ்.. பிறந்தவுடனே குழந்தைக்கு ஆதார் கார்டு.. ஜார்கண்டு ரயில்வே சாதித்த அதிசய நடைமுறை
சென்னை: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் உள்ளது.. குழந்தைகளின் ஆதார் அட்டை "பால் ஆதார்" (Baal Aadhaar) அல்லது நீல ஆதார் அட்டை என்று அழைக்கப்படுகிறது.. குழந்தையின் ஆதார் அட்டைக்கு கட்டணம் எதுவும் இல்லை.. 5 மற்றும் 15 வயதில் புதுப்பிப்பு இலவசமாகும்.. எனினும், குழந்தைகளுக்கு உடனே ஆதார் கார்டு கிடைப்பதில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இது மக்களின் கவனத்தை வெகுவாக பெற்று வருகிறது.
ஆதார் கார்டுகள் இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழாக செயல்படுகிறது. வங்கி கணக்கு திறப்பதற்கும், பணியில் சேர்வதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும், அரசு தொடர்பான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் என மொத்த செயல்பாடுகளுக்கும் ஆதார் அவசியமாகிறது.

ஆதார் விதிமுறைகள்
இப்போது நவம்பர் மாதம் துவங்கியிருக்கும் நிலையில், ஆதார் கார்டு தொடர்பான சில விதிமுறைகள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன.. அதன்படி, இனிமேல் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் செல்போன் நம்பரை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த புதிய மாற்றத்தால் அப்டேட் செய்வதற்காக ஆதார் சேவை மையத்திற்கு போக வேண்டியதில்லை.. ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம். இந்த புதிய முறையில், உங்கள் தகவல்கள் பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசு பதிவுகளுடன் ஒப்பிடப்படும். இதனால், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தேவையில்லை.
ஆதார் கட்டண சேவை மாற்றம்
ஆதார் சேவைகளுக்கான புதிய கட்டண விவரங்களிலும் மாற்றம் வந்துள்ளது.. அதன்படி மக்கள் தொகை விவரங்களை (demographic details) மாற்றுவதற்கான கட்டணம் 75 ரூபாயாகவும், பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கான (biometric updates) கட்டணம் 125 ரூபாயாகவும் இருக்கும். வருகிற 2026 ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். அதன் பிறகே புதிய கட்டணங்கள் பொருந்தும்.
அதேபோல 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் இலவசமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் - பான் இணைப்பு நவம்பர் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 31க்குள் ஆதார் மற்றும் பான் கார்டை நீங்கள் இணைக்காவிட்டால் வருகிற 2026 ஜனவரி 1ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செயல்படாமலேயே போய்விடும் என்றெல்லாம் புதிய விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, அவை தற்போது நடைமுறையிலும் உள்ளன.
பிறப்பு சான்றிதழ் அதிரடி
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் கார்டு வழங்குவதை பல அரசு மருத்துவமனைகள் செயல்படுத்தி வருகின்றன. அதேபோல இதை பல ரெயில்வே மருத்துவமனைகளும் செயல்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை இப்போது தொடங்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை
மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.. புதிதாக பிறந்த இந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும், பிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது..
இந்த தகவலை தென்கிழக்கு ரெயில்வே மண்டலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறது.. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டிருந்த அறிக்கையில், சக்ரதார்பூர் மண்டல ரெயில்வே மேலாளர் மற்றும் ஊழியர் நிர்வாக அமைப்பு, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறது.
சபாஷ் முயற்சி - உடனே ஆதார் கார்டு
குழந்தைகள் பிறந்த பிறகு, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவே 2 முதல் 3 வருடங்கள் வரை பல பெற்றோர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.. எனவேதான், பிறந்தவுடனேயே குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை விண்ணப்பிக்க சில மருத்துவமனைகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுவாக, குழந்தை பிறந்து 3, 4 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள்.. இந்த குறிப்பிட்ட நாட்களை சரியாக பயன்படுத்தி கொண்டால், பிறந்த சில நாட்களிலேயே குழந்தைகளுக்கு ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து விட முடியும் என்று அந்த மருத்துவமனைகள் நம்புகின்றன.
அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஒருபகுதியாக, தென்கிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு சொந்தமான ஜார்க்கண்ட் சக்ரதார்பூர் ரயில்வே மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் நடைமுறை தற்போது துவங்கப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது..!!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications