பிறப்பு சான்றிதழ் டூ சொத்து பத்திரப்பதிவு.. சார் பதிவாளர் ஆபீசில் ஆடியோ + வீடியோ: தமிழக பதிவுத்துறை
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன.. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதனால் ஒருசில நொடியில் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

பிறப்பு சான்றிதழ்
எனினும், சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது.. சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன..
தமிழகத்தில் தற்போது 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் இந்த அலுவலகங்களில்தான் பதிவாகின்றன..
சொத்து பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகத்தையே நாட வேண்டும்.. அப்படி பொதுமக்கள் சார் பதிவாளர் அணுகும்போது, சார் - பதிவாளர்கள் அவர்களை நேரடியாகவே சந்திக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வினை, நேரடியாகவே அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது ஏற்கனவே சார் பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.. ஆனால், அவைகளில் வெறும் நிகழ்வுகளை கண்காணிக்க மட்டுமே முடிகிறது.. அதுவும், டிஜிபி அலுவலகத்தில் மட்டுமே கண்காணிக்க முடிகிறது..
வீடியோவுடன் குரல் பதிவு
ஆனால், இப்போது வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. இதனால் டிஜிபி அலுவலகம் மட்டுமல்ல, தலைமை அலுவலகத்திலிருந்தும் நேரடியாக வீடியோ + ஆடியோவை அறிந்து கொள்ள முடியுமாம்.
இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், சில சார் - பதிவாளர்களின் ஒத்துழைப்புடன், விண்ணப்பதாரர்களுடன், வெளியாட்களும் வந்து செல்கிறாராம்.. இதுபோன்ற வெளியாட்களின் நடவடிக்கையை தவிர்ப்பதற்காகவும், அதன்மூலம் லஞ்ச நடமாட்டத்தை களையெடுப்பதற்காகவும், இப்புதிய தொழில்நுட்பத்தை பதிவுத்துறை அமல்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆடியோ + வீடியோ
அந்தவகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஐந்து இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதன்மூலம், .சார் - பதிவாளர் அலுவலகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யப்படுகிறது.. மேலும், பத்திரப்பதிவின்போது, பொது மக்களிடம், சார் - பதிவாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்ன பேசுகிறார்கள்? எப்படி அணுகுகிறார்கள்? வெளியாட்கள் யாராவது உள்ளே நுழைகிறார்களா? லஞ்சம் பெறப்படுகிறதா? போன்றவற்றை எல்லாம் கண்காணித்து, எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
ஒட்டுக் கேட்பது போலாகிவிடாதா
எனினும் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒருசிலர் எதிர்ப்புகளை சொல்கிறார்கள்.. காரணம், வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், மோசடியை தடுக்க, கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுப்பது நல்ல விஷயமே என்றாலும், அங்கு சரியான முறையில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்குள் சாதாரணமாக பேசிக்கொள்ளும் விஷயங்களை கூட, தலைமை அலுவலகத்தில் கேட்பது தவறான விளைவுகளையே தந்துவிடும்..
மேலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதையும் மேலதிகாரிகள் கேட்பது, பல்வேறு சங்கடங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும்.. இந்த நடவடிக்கை, ஒரு வகையில் ஒட்டுக்கேட்பதுபோலவே கருதப்படவும் வாய்ப்புள்ளது" என்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications