Bison Review: மாரி செல்வராஜின் தரமான சம்பவம்.. துருவ் விக்ரமிற்கு பெரிய ஹிட்.. பைசன் படம் எப்படி இருக்கு?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடித்த 'Bison' திரைப்படம் இன்று (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியான இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. துருவ்வின் உடல்மொழி மாற்றத்துக்காகவும், மாரி செல்வராஜின் சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
Bison Review
படத்தின் முதல் நாள், முதல் காட்சிக்குச் சென்ற ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள், தங்கள் முதல் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தமிழில் 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், சமூகப் பின்னணியில் உருவான ஒரு உணர்வுப்பூர்வமான விளையாட்டுத் திரைப்படமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. வன்முறை நிறைந்த சூழலில் இருந்து வந்து, தான் விரும்பிய கபடிப்போட்டி மூலம் அர்ஜுனா விருது வென்ற வீரரின் கதையை இது பேசுகிறது.

இந்தக் கதை நெகிழ்ச்சி, சமூக ஏற்றத்தாழ்வு, போராட்டம், ரவுடியிசம், தனிப்பட்ட வெற்றி போன்ற மாரி செல்வராஜ் படங்களுக்கே உரிய கருப்பொருட்களை அலசுகிறது. படம் வெளியானதில் இருந்து, சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரசிகர்கள், படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகள், வலுவான கதைசொல்லல், விளையாட்டு மற்றும் சமூக கருத்துகளை இணைத்த விதம் ஆகியவற்றைப் பாராட்டியுள்ளனர்.
Bison படம் எப்படி இருக்கு?
பல பயனர்கள், இது ஒரு நெகிழ்ச்சியான படம் என்றும், அதன் யதார்த்தமான கதைகூறல் பார்வையாளர்களுடன் ஆழமாகப் பிணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
#Bison first Half 💥💥💥💥💥💥
— AKaaayy (@iamarun_28) October 17, 2025
முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த துருவ் விக்ரம், தனது அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பிற்காகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான படமாக அமையும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது துருவ்வின் திரையுலகப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் பலரும் நம்புகின்றனர்.
இரண்டு சாதிய பகை கும்பல்களிடமிருந்து , தன் மகனை சிக்க விடாமல்
— Michael (@rec_83_dravidan) October 17, 2025
கரையேத்த துடிக்கும் தந்தையின் போராட்டம்
- #bison #blockbuster ..Excellent craft மாரி...
Carefully crafted political movie ..#bison பேசும் அரசியல் சரியானது , நேர்மையானதா ?
'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், 'பைசன்' படத்திலும் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அரசியலும், உணர்வுகளும், தனிப்பட்ட போராட்டங்களும் கலந்த அவரது பாணியை 'பைசன்' தொடர்வதாகப் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட துணை நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
#Bison - Interval 👍
— Chiyaan Mathan ☺CVF (@Mathanotnm) October 17, 2025
Sincere film making from Mari Selvaraj. Dhruv Is Fantastic. Music Super. Has a repetitive feel, but very Intense. So far its GOOD!💯💥👌#Bison #BisonKaalamadan #BlockbusterBison
நடிகர்களிடையே இருந்த இயல்பான நடிப்பு, இணக்கம் மற்றும் யதார்த்தமான கதைசொல்லல் ஆகியவை படத்தின் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஒளிப்பதிவாளர் எழில் அரசு கே., கிராமப்புறக் காட்சிகளையும், கபடிப்போட்டியின் விறுவிறுப்பையும் திரையில் உயிர்ப்பித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன.
#BISON CHARGES INTO THEATERS TODAY! Early premiere buzz is roaring!#DhruvVikram delivers a powerhouse, fiery performance as Kaalamaadan, nailing the intensity and emotion in Mari Selvaraj's gripping sports saga! pic.twitter.com/03NqI1dKx7
— Kolly Buzz (@KollyBuzz) October 17, 2025
பைசன் படம் எப்படி இருக்கு?
படம் வெளியாவதற்கு முன், துருவ் தனது கதாபாத்திரத்திற்காகச் செலவிட்ட பல ஆண்டுகால உழைப்பு குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்திருந்தார். இது ஒரு வாழ்வை மாற்றிய அனுபவம் என்றும், மாரி செல்வராஜுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Set your expectations at sky level kaalamaadan aka bison won't disappoint .
— Arun (@Arunmarlyzz) October 17, 2025
@mari_selvaraj x #DhruvVikram#Bison
சமீரா நாயர், தீபக் சைகல், பா.ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'பைசன்' படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகள் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு இருந்ததாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு உள்ளனர். நீங்களும் பைசன் படத்தை பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!












Click it and Unblock the Notifications