இஸ்லாமியர் + யாதவ்.. ஒரே ஒரு ஜாதியை நம்பி களமிறங்கிய தேஜஸ்வி.. சத்தமே இல்லாமல் அமித் ஷா ஆடிய கேம்
பாட்னா: பீகார் தேர்தல் முடிவுகள் தீவிரமாக வெளியாகி வருகின்றன. அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக - ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர். பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 136 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீகாரில் இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பீகார் தேர்தல் யாதவ் ஜாதி வாக்குகள்
அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக - ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பீகாரில், வழக்கமான நிலவரப்படி, யாதவ் வாக்குகளின் பெரும்பகுதி லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கே செல்கிறது. பிற சமூகங்களிடையே, அந்தக் கட்சிக்கு 5% வாக்குகள்கூட கிடைப்பதில்லை; அது ஒரு சாதி அடிப்படையிலான கட்சியாகவே செயல்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் வாக்குகளை பாஜக - ஜேடியூ அள்ளி உள்ளது.
இதனால், ஆர்ஜேடி கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான 16% அல்லது அதற்கு மேற்பட்டோர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கூடுதலாக, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளும் இவர்களுடன் இணைகின்றன.
இந்த சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக தேஜஸ்வி யாதவ் - லாலு நிறுத்திய 143 வேட்பாளர்களில் 56க்கும் மேற்பட்ட யாதவ் சமூக வேட்பாளர்களை மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக நிறுத்தியுள்ளது. ஆனால், பாஜக கூட்டணி யாதவ பின்னணியைச் சேர்ந்த 6 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி, மற்ற அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம்
பாஜக அனைத்து சமூகத்தினருக்கும் அங்கீகாரம் அளித்து இந்துக்களை ஒன்றிணைத்துள்ளது. சுமார் 50% பட்டியல் இனத்தவரின் வாக்குகளும் முழுமையாக பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளன. இதுவே லாலு குடும்பம் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதற்கு முக்கிய காரணமாகும். அதாவது யாதவை மட்டுமே நம்பி ராஷ்டிரிய ஜனதா தளம் களமிறங்கியது. ஆனால் பாஜக எல்லா ஜாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது அந்த கட்சிக்கு சாதகமாக மாறியது.
பீகார் மாநிலம் நக்சலிசத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்காமல், லாலுவின் குழுவை மக்கள் நிராகரிப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் பின்பற்றிய யாதவ் சாதி வெறி என்று வாதங்கள் வைக்கப்படுகின்றன.
பீகாரில் 2025 சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர். பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை பெண்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் வாக்குப்பதிவு 71.6% ஆக உயர்ந்துள்ளது. இது ஆண்களின் வாக்குப்பதிவை (62.8%) விட 8.8 சதவீதம் அதிகம். பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும்.
பீகார் பெண்கள் வாக்கு
வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் பிறகு, பீகாரில் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும், 3.51 கோடி பெண் வாக்காளர்களும் இருந்தனர். அதாவது, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 42.34 லட்சம் குறைவாக இருந்தனர்.
இருப்பினும், இந்த முறை 2.52 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில், 2.47 கோடி ஆண்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்திருப்பதைக் காட்டுகிறது. 2005 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் முதல்முறையாக முதல்வரானதிலிருந்து, கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே பெண்கள் வாக்குகளும் அங்கே பாஜகவிற்கு சென்றுள்ளதாகவே தோன்றுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications