பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது.. பாய்ந்தது ஸ்டாலின் படத்தை அகற்றிய பழைய வழக்கு
சென்னை: அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் தமிழ்நாடு போலீஸ் கைது செய்து இருக்கிறது.
தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருபவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்ணாமலையின் வலதுகரம் என்று பரவலாக அழைக்கப்படும் இவர் பாஜகவில் இணைந்தவுடன் மற்ற முக்கிய நிர்வாகிகளை விட இவர் கட்சி நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ட்விட்டரில் இவர் பதிவிடும் பதிவுகள், யூடியூப் சேனல் பேட்டிகள் மூலம் பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி பனையூரில் அமைந்து இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே சுமார் 50 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் நடப்பட்டு பாஜகவின் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பாஜகவினர் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பாஜக தொண்டர்களும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கொடிக்கம்பத்தை அகற்ற ஜிசிபி வாகனத்தை கொண்டு வந்தபோது ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் ஜிசிபி மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்தனர். இதனை அடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக பாஜக தொண்டர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீதும் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
அவர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
அதில் பேருந்து நிறுத்தங்களில் செய்யப்பட்டு இருந்த விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். இதனை அடுத்து பிரதமர் மோடியின் புகைப்படங்களை அந்த விளம்பரங்களில் அமர் பிரசாத் ரெட்டி ஒட்டினார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அகற்றியதாக அவர் மீது கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications