பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் வேட்பு மனு தாக்கல் வரும் 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும். இந்த நிலையில் அதிமுக திமுகவிடம் சண்டை போட்டு தொகுதிகளை வாங்கிய பாஜகவும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கி விட்டு நிலையில் இந்த இரு கட்சிகளில் என்ன தான் பிரச்சனை என்ற கேள்வி எழுந்துள்ளது.
17ஆவது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் ஆறாம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம், என நான்கு பிரதான போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ராமதாஸ் சசிகலா கூட்டணி, டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி என தனித்து களமிறங்கும் அணிகளும் இருக்கிறது.
இதனால் முன்னபோதும் இல்லாத அளவு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அந்த கூட்டணியில் 13 கட்சிகளும் சில அமைப்புகளும் தேர்தலில் களமிறங்குகின்றன. எந்த கட்சிக்கும் இல்லாத அளவு காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 28 தொகுதிகளை வாங்கி இருக்கிறது.
11 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் தயார் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீதமுள்ள 17 தொகுதிகளில் யாரை நிறுத்துவது என காங்கிரஸ் தலைமை மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது. குறிப்பாக உசிலம்பட்டி, பெண்ணாகரம், மேலூர், சோளிங்கர், பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, நாங்குநேரி, சிவகாசி, குளச்சல், கடலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்பதால் அதனை உறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த தொகுதிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பட்டியல் பணம் பெற்றுக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக எதிர்கோஷ்டியினர் புகார் அளித்ததால் அந்த பட்டியல் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையே மேலும் சில லோக்கல் தலைகள் டெல்லியில் முகாமிட்டு தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பணம் வாங்கிக் கொண்டு செல்வப் பெருந்தகை வேட்பாளர் பட்டியல் தயாரித்ததாக ராகுல் காந்திக்கு புகார் சென்ற நிலையில் கடும் கோபத்தில் அந்த பட்டியலை அவர் நிராகரித்து விட்டார். இதனால் தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வில் மோதல் நீடிப்பதாக சொல்கின்றனர்.
அதே நேரத்தில் எதிர் முகமான பாஜக அதிமுக கூட்டணியிலும் இதே சிக்கல்தான் இருக்கிறது. 27 தொகுதிகளை அடம் பிடித்து பெற்ற பாஜக அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. பாஜக டிக் செய்த தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை. குறிப்பாக அண்ணாமலை எதிர்பார்த்த எந்த தொகுதியும் பாஜகவுக்கு தரப்படவில்லை. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
கோவையில் முகாமிட்டிருந்த அண்ணாமலை சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி இருந்தார். ஆனால் அதிமுக தானே அந்த தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஈரோடு, மொடாக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை போட்டியிட வைக்க பாஜக தலைமை வலியுறுத்திய நிலையில் தேர்தலின் போட்டி போடவே மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பாஜக. அதாவது 27 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை தங்களுக்கு வேறு தொகுதிகளாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 3 கட்டங்களாக அதிமுகவின் 165 வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. ஒரு சிலர் லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில் பாஜக தொகுதிகளை மாற்றி கேட்பதால் முடியவே முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக சொல்லி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் பாஜகவில் இருக்கும் அதிருப்தி தலைவர்கள் திமுக தரப்புக்கு தாவும் எண்ணத்தில் இருக்கின்றனர். வேட்பு மனுவை ஆறாம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஆனால் இரண்டு நாட்கள் விடுமுறை காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால் அதற்குள் அதிமுக தொகுதிகளை தருமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கும் நிலையில். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கின்றனர் அதிமுகவினர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் திமுக கூட்டணியில் காங்கிரசும் மேற்கூறிய காரணங்களால் தான் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி











Click it and Unblock the Notifications