உதயநிதியை கை காட்டிட்டு கோபமா போனாரே கு.க.செல்வம்.. அவருக்கு இப்படி ஒரு நிலையா.. திரும்பிருவாரா!
ஆயிரம் விளக்கு தொகுதியில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: திமுக, பாஜக வேட்பாளர் லிஸ்ட்கள் வெளியான நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி முக்கிய கவனத்தை பெற்று வருகிறது..!
திமுகவை பொறுத்தவரை சென்னை மாவட்டத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் கட்சி.. அதிலும் சில தொகுதிகள் திமுகவின் கோட்டையாகவே இன்றும் உள்ளன.. அதில் ஒன்றுதான் ஆயிரம் விளக்கு.
இதற்கு ஸ்டாலின் தொகுதி என்றே சொல்வார்கள்.. காரணம், ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் ஸ்டாலின் பெரும்பாலும் போட்டியிடுவார்.. பலமுறை போட்டியிட்டு வென்றவர்.. ஒருமுறை ஹாட்ரிக் வெற்றியும் அடித்தார்.

ஸ்டாலின்
பிறகு கொளத்தூருக்கு ஸ்டாலின் தன்னுடைய தொகுதியை மாற்றி கொண்டுவிட்டதால், கு.க. செல்வம், இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். ஆனால், இவர் திடுதிப்பென்று, திமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.. உதயநிதியை தன்னுடைய ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார், என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக பக்கம் தாவினார்.. இதனால் அரசியல் களமே பரபரப்பானது..

எழிலன்
அதற்கேற்றார்போல, கடந்த ஒரு மாதமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற செய்திகள் வந்தன.. அல்லது சேப்பாக்கத்தில் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டன...
இப்போது 2 விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன.. கு.க.செல்வம் சொன்னதுபோல, ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி நிறுத்தப்படவே இல்லை.. அவருக்கு பதிலாக டாக்டர் எழிலன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அப்படியானால் செல்வம் ஏன் சொன்னார்? இப்படி ஒரு பழியை போட்டது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் எழுகிறது..

சபரீசன்
அதேசமயம், இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாக காய் நகர்த்த தொடங்கினார் டாக்டர் எழிலன்... இன்னொரு பக்கம் திமுகவின் போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஜின்னா, உதயநிதி மூலம் தனக்கு சீட் தர வேண்டும் என்று காய் நகர்த்தி உள்ளார்.. இதனால், யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்தான், சபரீசன் "சாய்ஸ்" ஓகே ஆனதாக சொல்லப்படுகிறது.

வாய்ப்பு
அதேபோல, பாஜகவுக்கு தாவிய குக செல்வத்துக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அதுவும் நடக்கவில்லை.. இதற்கு காரணமும் தெரியவில்லை.. செல்வத்துக்கு வாய்ப்பு தந்திருந்தால், நிச்சயம் ஆயிரம் விளக்கை மீண்டும் தன் பிடியில் வைத்திருந்திருப்பார். மாறாக, குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதனால், குக செல்வம் சற்று அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

குஷ்பு
குஷ்புவும் சரி, எழிலனும் சரி, இருவருக்குமே இது முதல் தேர்தல்.. குஷ்புக்கு இந்த தொகுதி சற்று நெருக்கம்தான்.. இளைஞரும், சமூக செயற்பாட்டாளரும், திட்டக்குழு தலைவராக இருந்த நாகநாதன் மகன் எழிலனுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும் என்கிறார்கள்.. அதேபோல, குஷ்புவும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட மாட்டார் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. எனினும், உதயநிதியை கையை காட்டிட்டு குக செல்வம், கட்சி தாவிய நிலையில், அவருக்கு ஏன் ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications