வாயை விட்ட அண்ணாமலை.. “திமுக அடிவருடிகள்” - ஆர்ப்பாட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள் மீது பாய்ச்சல்
சென்னை: தனக்கு எதிராக இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவித்த பத்திரிகையாளர்களை திமுக அடிவருடிகள் என மீண்டும் கடுமையாக சாடி இருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் நேர்காணல் அளித்து இருந்தார். இந்த நேர்காணலை எடுத்து நெறியாளர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்களின் ஆசிரியர்கள், பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன். இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ. பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அருவெறுக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது! பத்திரிகையாளர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்த அண்ணாமலையை புறக்கணிக்க ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறது!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (19.01.24) பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில், அவர் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கேட்போர் முகம் சுழிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமான ஒரு ஒப்பீட்டை கருத்தாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த நேர்காணலை எடுத்த பத்திரிகையாளரை மிகவும் கேவலமாக சித்தரித்துள்ளார். பொது வெளியில் பேசும்போது, சாதாரண பொதுமக்கள் கூட பேசத் தயங்கும் கேவலமான வார்த்தைகளை அண்ணாமலை மிகச் சாதாரணமாக பேசியுள்ளார். அதுவும் பத்திரிகையாளரை குறிப்பிட்டு அவ்வாறு பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலை தெரிவித்த கேவலமான கருத்துகளுக்கு இதுவரை அவர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத நிலையில், தற்போது மிகவும் தரம் தாழ்ந்து மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த இழிவான நடவடிக்கைகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகின்றது. ஒருமுறை, அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், அண்ணாமலையின் இந்த தரங்கெட்ட தொடர் செயல்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலில், சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் அண்ணாமலை அளித்துள்ள பதிலிலும், பிரஸ் கவுன்சிலை அவமதிக்கும் வகையிலும், எதற்காக புகார் அளிக்கப்பட்டதோ அதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாய்க்கு வந்த வகையில் உளறிக்கொட்டியுள்ளார். இவ்வாறு நாம் கொடுத்த புகாருக்கான ஆதாரத்தை தன்னுடைய பதில் அறிக்கையின் மூலம் அண்ணாமலையே கொடுத்திருக்கும் நிலையிலும், மாதங்கள் பல கடந்தும் இந்திய பிரஸ் கவுன்சிலில் நமது புகார் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தரம் தாழ்ந்து நடந்துள்ளார் அண்ணாமலை.
ஆகவே, அண்ணாமலையின் இந்த கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்ணாமலையின் இந்த தொடர் கீழ்த்தர நடவடிக்கையை, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டிப்பதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது புகாருக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்துகொள்ளும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பை, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தும் அதே வேளையில், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகை நிறுவனங்களை ஏற்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தான் பேசிய கேவலமான வார்த்தைகள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பேசப்படுவது என்று வாய் கூசாமல் பொய் சொன்னதுடன், தமிழ்நாடு மக்களையும் அவமானப்படுத்தியுள்ள அண்ணாமலை மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருந்தது.
-
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications