“பாசிஸ்ட்”.. ட்ரோல் வீடியோவுக்கே கைதா? அப்போ திமுக ஐடி விங்.. சவுக்குக்காக வரிந்துகட்டிய அண்ணாமலை

"ட்ரோல் வீடியோவை பகிர்ந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களையும் சிறையில் அடைக்கவேண்டும்."

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விமர்சித்து மீம் வீடியோ வெளியிட்ட வாய்ஸ் ஆப் சவுக்கு ட்விட்டர் கணக்கின் அட்மின் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் பல்வேறு மீம்களை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

அதில், செந்தில், கவுண்டமணி நகைச்சுவையை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிடிஆருடன் ஒப்பிட்டு மீம் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது. இதனை பகிர்ந்த Voice of Savukku என்ற ட்விட்டர் பக்கத்தின் அட்மின் பிரதீப் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை கண்டனம்

இதனை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "ஒரே குடும்பத்துக்கு அனைத்து பதவிகளும் வழங்கப்படும்போது ஜனநாயகம் என்பது எதேச்சதிகராம் ஆகிவிடுகிறது. இதுவரை இல்லாத சர்வாதிகார அரசாக உள்ளது. ட்ரோல் வீடியோவை பகிர்ந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களையும் சிறையில் அடைக்கவேண்டும்.

இதெல்லாம் ஒரு குற்றமா?

இதெல்லாம் ஒரு குற்றமா?

அதை முழு நேர வேலையாக அவர்கள் செய்து வருகிறார்கள். ஆனால், தமிழ்நாடு போலீஸ் வாய்ஸ் ஆஃப் சவுக்குவை கைது செய்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கைது செய்வதற்கு தகுதியற்ற குற்றம் என்று தெரிந்தும் திமுகவினரின் வேண்டுகோளின்பேரில் தமிழ்நாடு காவல்துறை இதை செய்து இருக்கிறது.

உண்மையான பாசிசம்

உண்மையான பாசிசம்

கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, நள்ளிரவு கைதுகள் மற்றும் எந்த சாதனைகளையும் செய்யாமல் தங்களை பற்றி சுய விளம்பரங்களை செய்துகொள்வதுதான் உண்மையான பாசிசவாதிகளின் அடையாளம் திரு முக ஸ்டாலின்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாஜகவை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கைதை கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

யூடியூப் சேனல்களிலும், ட்விட்டரிலும், இணையதளத்திலும் அரசியல் விமர்சனங்களை தெரிவித்து வருபவர் சவுக்கு சங்கர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சிறை தண்டனை விதித்தது.

உதயநிதிக்கு சவால்

உதயநிதிக்கு சவால்

சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு மீண்டும் தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அடுத்து முறை தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். இவரது கருத்துக்களை பகிரும் வகையில் Voice of Savukku என்ற ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அட்மின்தான் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+