Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு "கர்நாடக முகம்" இருக்கு காட்டவா.. தூக்கி போட்டு மிதிச்சுருவேன்.. அண்ணாமலை வார்னிங்..!

திமுகவின் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்.. நான் எல்லாம் நான் எல்லாம் எவ்ளோ பெரிய ஃபிராடுங்களை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன்.. திமுககாரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன்.." என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த பேச்சு பேசப்பட்டது பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பிரச்சாரத்தில்.. இப்படி பேசியவர் போலீஸில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த பாஜகவின் அண்ணாமலை ஐபிஎஸ்!

Recommended Video

    எனக்கு வேற Karnataka முகம் இருக்கு.. அதை காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன் - BJP வேட்பாளர் Annamalai

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. அங்கு திமுக கூட்டணியின் செந்தில்பாலாஜி படுஸ்டிராங்காக இருப்பது தெரிந்தும் அண்ணாமலை களம் இறங்கி உள்ளார்.

    இவருக்காக நமீதா முதல் பலர் திரண்டு வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோக அண்ணாமலையின் பிரச்சாரங்கள் சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தி வருகிறது... அதற்கு காரணம் அவரது பேச்சும், திமுகவை எல்லை மீறி விமர்சிப்பதும்தான்..!

     சமூக நீதி

    சமூக நீதி

    2 நாட்களுக்கு முன்பு இப்படித்தான், தீவிர வாக்கு சேகரிப்பில் அண்ணாமலை ஈடுபட்டிருந்தார்.. அப்போது அவர்,
    "திமுகவினர் சமூக நீதி என்று சொல்வாங்க.. ஆனால் முதல்முறையாக இஸ்லாமியரைக் குடியரசுத் தலைவர் ஆக்கியது பாஜகதான்... தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருத்தரை இவங்க மாவட்டச் செயலாளராக நியமித்தது இல்லையே ஏன்?

     முஸ்லிம் சமுதாயம்

    முஸ்லிம் சமுதாயம்

    திமுகவினர் ஒரு எம்எல்ஏ கூட முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு இந்த முறை சீட் தரவில்லையே ஏன்? இவங்களை எல்லாம் நம்பி ஓட்டு போட்டால், 5 வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஊருக்கு 2 வீடுகள் தான்.. ஏன்னா, எல்லாருமே இந்த ஊரை காலி செய்துட்டு போய்டுவாங்க" என்றார். ஆனால், இதுவாவது பரவாயில்லை.. நேற்று அண்ணாமலை பேசிய பேச்சு படுஅதிர்ச்சியை தந்துவிட்டது.. ராதாரவியையே மிஞ்சிய அந்த பேச்சை கேட்டு, அங்கிருந்த மக்கள் உறைந்து போயினர்..

     செந்தில்பாலாஜி

    செந்தில்பாலாஜி

    அந்த பேச்சு இதுதான்: "செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்.. நான் எல்லாம் நான் எல்லாம் எவ்ளோ பெரிய ஃபிராடுங்களை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன்.. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இதுன்னு.. கையை வெச்சா, அண்ணாமலை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா? அதனால திமுககாரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன்..

     வன்முறை

    வன்முறை

    நான் வன்மத்தை கையில் எடுப்பதற்கு தயாராக கிடையாது.. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறேன்.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அது கர்நாடக முகம்.. அதை நான் இங்கே காட்ட வேணாம்னு நினைக்கிறேன்.. நீ என்ன செய்றியோ செய்.. இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.. நியாயப்படி, தர்மப்படி செய்வேன்.. இவ்ளோ தூரம் நான் செய்யறதுல்லாம் உங்களுக்காக" என்றார்.

     நமீதா

    நமீதா

    நேற்று முன்தினம்தான் நமீதா இங்கு பேசி அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்தார்.. கையில் ஒரு துண்டுசீட்டை வைத்து கொண்டு, "அவர் பெரிய கர்நாடக போலீஸ் ஆபீசர்.. டிசிபியா இருந்தார்.. ஒரு தலைவர், மக்களோட மக்கள் மனசில் இருக்கார்.. சிங்கம் மாதிரி ஒரு போலீஸ் ஆபிசர் நம்ம ஏரியாவில் இருந்தால் லா & ஆர்டர் & கிரைம் எல்லாமே சேப்ட்டி.. எல்லாமே சூப்பரா இருக்கும்ல..? ஒரு சிங்கம் வந்து எம்எல்ஏவா ஆக வந்தால் எப்புடி இருக்கும்? சூப்பரா இருக்கும் இல்லியா,..? நல்லா படிச்சவரு, எல்லா விவரமும் தெரிஞ்சவரு.." என்று சொல்லிவிட்டு போனார். படிச்சவங்க இப்படித்தான் பேசுவாங்களா? என்பதை நமீதாதான் சொல்ல வேண்டும்.

    வானதி

    வானதி

    இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு ஒரு இடமும் சாதகமாக வரவில்லை.. பெயரளவுக்குகூட வரவில்லை.. வானதியின் "லிப் சர்வீஸ்" வார்த்தை தாக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும், ராதாரவியின் ஆபாச பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் என்ன பதிலை தேர்தலில் தரப் போகிறார்களோ தெரியவில்லை.. நேற்று ஒரே நாளில், யோகியின் வருகையால் கோவையே அல்லோகல்லப்பட்டுவிட்டது.. இப்போது அண்ணாமலையின் பேச்சும் இந்த லிஸ்ட்டில் இணைகிறது.. மொத்தத்தில் "தாமரை" வாடி போவதற்கு இவர்கள் எல்லாம்தான் நாளைக்கு அடிப்படை காரணமாக இருக்க போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+